உருமுச்சி
உருமுச்சி[1] அல்லது உரும்கி , சீனமொழியில் உலுமுகி(ئۈرۈمچی|Ürümchi}}; (=乌鲁木齐|t=烏魯木齊|p=Wūlǔmùqí) சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிங்ஜியாங்க் தன்னாட்சி வலயத்தின் தலைநகராகும். 2.3 மில்லியன் மக்கட்தொகையுடன் சீனாவின் மேற்கு உட்புறத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் உரும்கி. 1990களில் இருந்து இந்நகரம் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து இன்று மண்டல போக்குவரத்து மற்றும் வணிக மையமாக உருவெடுத்துள்ளது. வரலாறுபட்டு சாலை வழியில் வடக்குப்பகுதியில் இருந்தாலும் இது ஒரு நவீன நகரமாகும். தற்போதைய உரும்கியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் லுன்டாய் என்னும் பழமை வாய்ந்த நகரம்,(கிபி648) பட்டுவழியில் சுங்கம் வசூலித்து வந்தது.பின்னர் வரும் காலங்களுக்கு தரவுகள் இல்லை. கிங் பரம்பரையில் (1763) பேரரசர் கியான்லாங் லுன்டாயை விரிவுபடுத்தி டைஹுவா எனப் பெயரிட்டார். 1884, பேரரசர் குயாங் ஜு சிங்ஜியாங் மாநிலத்தை உருவாக்கி டைஹுவாவினை அதன் தலைநகரமாக்கினார்.[2] பெப்ரவரி 1, 1954இல் சீன மக்கள் குடியரசு ஏற்பட்டபின், இந்த நகருக்கு மங்கோலியன் மொழியில் அழகிய புல்வெளி என்னும் பொருள்படும் உரும்கி என பெயர் மாற்றப்பட்டது. மக்கள்தொகை2000 கணக்கெடுப்பின்படி, உரும்கியில் 2,081,834 மக்கள் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி 174.53 வசிப்பவர்கள்/சகி.மீ.. இந்த தொகையில், 75.3% பேர் ஹான் சீனர்கள்,15.8% பேர் யுகுர் மக்கள்,8.0% பேர் ஹுயு மக்கள்,மற்றும் 2.3% பேர் கசக்குகளும் கிகிசுக்களும் ஆகும். புவியியல் மற்றும் வானிலைசீனாவின் மேற்குப்பகுதியில் மிகப்பெரிய நகரமான உரும்கி கின்னஸ் உலக சாதனைகளில் உலகில் எந்தக் கடலிலிருந்தும் வெகுதொலைவில் உள்ள நகரம் என்னும் வகையில் இடம் பெற்றுள்ளது. அருகாமையிலுள்ள கடலோரத்திலிருந்து 1,400 மைல்கள்(2,500 கி.மீ.) தூரத்தில் உள்ளது. நகரத்தின் பரப்பளவு 10,989 ச.கி.மீ.. சராசரியாக உயரம் 800 மீட்டர்கள். உரும்கியின் வானிலை ஐரோப்பிய வானிலையை ஒத்ததாகும். வெப்பமான,உலர்ந்த வேனில் காலத்துடன் குளிர்ந்த,ஈரமான குளிர்காலமும உண்டு.வேனில் காலத்தில் வெப்பநிலை சராசரியாக 24° செல்சியஸ் (75°பாரன்ஹீட்),குளிர்காலத்தில் சராசரியாக -16 °C (3 °F) நிலவுகிறது.
பொருளாதாரம்உரும்கி சிங்ஜியாங்க் மாநிலத்தின் முக்கிய தொழில்மையமாகும். உரும்கியும் அதன் சுற்றுநகர்களும் சிங்ஜியாங்கின் 64.5% தொழில் உற்பத்திக்கு காரணமாயுள்ளன.தனிநபர் மொத்த உள்ளக உற்பத்தி அமெரிக்க டாலர் 6,222 ஆக 2008இல் இருந்தது.[1]. 2008 புள்ளிவிவரங்களின்படி,மேற்கு சீனாவின் நகரங்களில் செலவழிக்கக்கூடிய வருமானம் வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தது.[3] உரும்கி வெளிநாட்டு பொருளாதார உறவுகள் மற்றும் வணிக கண்காட்சி 1991இலிருந்து ஆண்டுதோறும் நடைபெறுகிறது.உள்நாட்டு,வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த கண்காட்சி உதவுகிறது.[4] சுற்றுலா
கல்விஉரும்கியில் சிங்ஜியாங்க் பல்கலைக்கழகம்,சிங்ஜியாங்க் சாதரண பல்கலைக்கழகம், சிங்ஜியாங்க் வேளாண் பல்கலைக்கழகம், சிங்ஜியாங்க் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பல கல்விக்கூடங்கள் உள்ளன. போக்குவரத்துவான்வழிஉரும்கி திவோபு பன்னாட்டு விமானநிலையம் சீனாவிலுள்ள ஐந்து பெரிய விமானநிலையங்களில் ஒன்றாகும்.சைனா சதர்ன் ஏயர்லைன்ஸ் எனப்படும் விமானசேவையின் மையமாக விளங்குகிறது. தொடருந்து
சாலைகள்செல்லும் சாலைகள்:
ஊடகம்சிங்ஜியாங்க் நெட்வொர்கிங் டிரான்ஸ்மிஷன் லிமி. என்ற நிறுவனம் உரும்கி மக்கள் ஒலிபரப்பு நிலையம் மற்றும் சிங்ஜியாங்க் மக்கள் ஒலிபரப்பு நிலையம் என இரு நிலையங்களை நிர்வகித்து வருகிறது. இந்நிலையங்களில் மந்தாரின்,உய்குர்,கசக்,மங்கோலியன்,உருசியன் மற்றும் கிர்கிஸ் மொழிகளில் ஒலிபரப்பு செய்துவருகிறது. உரும்கியிலுள்ள சிங்ஜியாங்க் தொலைக்காட்சி நிலையம் (XJTV) சிங்ஜியாங்க் மாநிலத்திலுள்ள பெரிய காணொளிபரப்பு நிலையமாகும். தவிர நகரத்திற்கான உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் உரும்கி தொலைகாட்சி நிலையம் (UTV)(乌鲁木齐电视台) ஆகும். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia