உருவங்கள் மாறலாம்
உருவங்கள் மாறலாம் 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. இரமணன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.[1] அவருக்கு ஜோடியாக சுஹாசினி நடித்தார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ். வி. சேகர், மனோரமா ஆகியோரிம் நடித்த இத்திரைத்திரைப்படம் நகைச்சுவை நிரம்பிய காட்சிகளைக் கொண்டதாகும்.[2] திரைக்கதைதிரைக்கதை ஒய். ஜி. மகேந்திரனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மகேந்திரன் மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஒரு நாள் அவருக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். சிவாஜி கணேசன் உருவத்தில் வந்த கடவுள் உலகில் நடக்கப்போகும் சில விடயங்களை மகேந்திரனுக்குச் சொல்லுகிறார். அதை மக்களுக்கு அறிவிக்கும் படி மகேந்திரனிடம் சொல்கிறார். மகேந்திரன் அதைச் சொல்ல ஆரம்பத்தில் மக்கள் ஒருவரும் நம்பவில்லை. பின்னர் அவர் சொன்னவைகள் நடக்கின்றன. அதன்பின் மக்கள் மகேந்திரனை ஒரு பெரிய ஞானி எனச் சொல்லி அவரிடம் வரத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு தடவையும் கடவுள் ஒவ்வொரு வடிவத்தில் வருகிறார். கமல்ஹாசனாக, ரஜினிகாந்தாக, ஜெய்சங்கராக ... இப்படி ஒவ்வொரு தடவையும் வந்து நடக்கப் போகும் விடயங்களை மகேந்திரனுக்குக் கூறுகிறார். ஒரு தடவை வந்த கடவுள் மகேந்திரனிடம் அவரின் (மகேந்திரனின்) மகன் இறக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார். மகேந்திரன் கடவுளைத் திட்டத் தொடங்குகிறார். அவர் திரும்பவும் கடவுள் பக்தர் ஆகிறாரா என்பதே மீதிக்கதை. இத்திரைப்படத்தில் சுவாரசியமான காட்சிகள்: கடவுள் நம்பிக்கையில்லாத கமல்ஹாசன் கடவுளாக வருகிறார். ராகவேந்திர பக்தரான ரஜினிகாந்த் ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலுக்குள்ளிருந்து வருகிறார். கடவுள் நீதி மன்றத்தில் தோன்றி தான் கடவுள் தான் என்பதை நிரூபிப்பதற்காக திடீரென மறைகிறார்.[3] நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia