உலக தாவரவள இணைநிலை
பின்புலங்கள்இத்தளத்தினை தொடங்குவதற்கு முன், 2010 ஆம் ஆண்டு கியூ தாவரவியல் அமைப்பு, மிசோரி தாவரவியல் பூங்காவுன் இணைந்து, தாவரப்பட்டியல் (The Plant List) என்ற இணையதளத்தினைத் தொடங்கியது. அதன் வேறுபட்ட, மேம்பட்ட வடிவமாக, இந்த உலக தாவரவள இணைநிலை இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் உலக தாவர வள ஆவணங்களை (Flora (publication)) கொண்டு செயற்படத் திட்டமிட்டது.[1] 2020 ஆம் ஆண்டை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்ட இத்திட்டமானது, ஐக்கிய நாடுகளின் பல்லுயிரியல்பு கருத்தரங்கு (United Nations Convention on Biological Diversity) திட்ட அறிக்கைகளை இலக்காகக் கொண்டதாகும். இதன்படி, திரட்டப்படும் தரவுகளால், உலகில் தாவரங்களின் அழிந்து வரும் தன்மை, உயிரின வளங்களை ஆய்ந்தறிய வழிவகுத்தது. இந்த ஆய்வுகளானது, பன்னாட்டு உயிரின ஆய்வு அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புகளினால் விளைந்தது[2] எனலாம். இவ்வமைப்புகள் இறுதியாக தாவர வளங்காப்புக்கான பன்னாட்டு உத்தி (Global Strategy for Plant Conservation) (GSPC) என்பதனை அறிவித்தது. அந்த அறிவிப்பு யாதெனில், “இணைய இணைப்பின் வழியே தெரிந்த தாவரவளங்களை அமைத்தல்” என்பதாகும். இதையும் காணவும்மேற்கோள்கள்துணைநூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia