உலக இரட்சகர் சபை

உலக இரட்சகர் சபை
Congregation of the Most Holy Redeemer
உருவாக்கம்9 நவம்பர் 1732
வகைமத நிறுவனம்
தலைமையகம்ரோம், இத்தாலி
முக்கிய நபர்கள்
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி — நிறுவனர்
வலைத்தளம்www.cssr.com

உலக இரட்சகர் சபை (Congregation of the Most Holy Redeemer - C.Ss.R) என்பது கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஒரு துறவற சபையாகும்[1]. இது புனித அல்போன்சு லிகோரி (1696-1787)[2] என்பவரால் இத்தாலி நாட்டில் நேபுள்சு நகர்ப்புறத்தில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு பணி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

உலக இரட்சகர் சபைத் துறவியருள் குருக்களும் அருட்சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் தற்போது 77க்கும் அதிகமான நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

பணி நோக்கு

உலக இரட்சகர் சபைத் துறவியர் இயேசு கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளையைச் செயல்படுத்துவதைத் தம் பணிக்குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை

— யோவான் 15:12

என்று இயேசு தம் சீடருக்குக் கூறியதை இச்சபையினர் ஏற்று, மறையறிவிப்புப் பணி செய்கின்றனர். இயேசுவின் நற்செய்தியைப் போதித்தல், தியானங்கள் கொடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மரியா பக்தியைப் பரப்புதல்

இச்சபையினரின் சிறப்புப் பணிகளுள் ஒன்று அன்னை மரியாவின் பக்தியை, சிறப்பாக சதா சகாய மாதா பக்தியை மக்களிடையே பரப்புதல் ஆகும்.

இந்தியாவில் உலக இரட்சகர் சபை

உலக இரட்சகர் சபைத் துறவியர் இல்லம் இந்தியாவில் முதன்முறையாக பெங்களூரில் 1940இல் தொடங்கப்பட்டது. பின்னர் மிகுந்த வளர்ச்சியடைந்தது. இந்தியா 1945இல் இச்சபையினரின் துணை மண்டலமாகவும் 1972இல் மண்டலமாகவும் வளர்ச்சி பெற்றது. 2011ஆம் ஆண்டு கணிப்புப்படி, இந்தியாவில் உலக இரட்சகர் சபைத் துறவியர் 260 பேர் பணிசெய்கின்றனர். இந்தியாவில் ஆலுவா மண்டலம், மும்பை மண்டலம் என இரு பகுதிகளில் இச்சபையினர் உழைக்கின்றனர்.

ஆதாரங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya