உலக குறைப்பிரசவ தினம்

உலக குறைப்பிரசவ தினம் World Prematurity Day
அதிகாரப்பூர்வ பெயர்உலக குறைப்பிரசவ தினம்
பிற பெயர்(கள்)உ,கு.தி
கடைப்பிடிப்போர்உலகம் முழுவதும்
நாள்நவம்பர் 17
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை2011

உலக குறைப்பிரசவ தினம் (World Prematurity Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்[1]. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. இது உலகளவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளில் 10 பேரில் ஒரு குழந்தைக்குச் சமமாகும்[2]. உலகளாவிய ரீதியில் 15 மில்லியன் குழந்தைகள் மிக விரைவில் குறைப்ரசவத்தில் பிறக்கின்றன என்பதையும், நம்பகமான நேர போக்கு தரவுகளைக் கொண்ட பெரும்பாலான நாடுகளின் குறைப்பிரசவ விகிதங்கள் அதிகரித்து வருவதையும் நாடு அளவிலான மதிப்பீடுகள் காட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கு 4 இன் படி முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வது மிகவும் சிக்கலான ஒன்றாகக் கருதப்பட்டது. புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கு 5 தாய்வழி ஆரோக்கியம் மற்றும் தொற்று நோயற்ற நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் கூடுதல் குறைபாடுகளுடன் உள்ளதால் குடும்பங்களையும் மற்றும் நாட்டின் சுகாதார அமைப்பையும் பாதிக்கிறது.[3].

வரலாறு

2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பெற்றோர் அமைப்புகள் நவம்பர் 17 அன்று குறைப்பிரசவம் தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளாக உருவாக்கப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.[4]தற்போது உலகளாவிய வருடாந்திர தினமாகவும் அனுசரிப்பட்டு வருகிறது [5]

குறைப்பிரசவ தினம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பங்குதார அமைப்புகள் போன்றவை செயல்படுகின்றன. ஊடக பிரச்சாரங்கள், உள்ளூர் நிகழ்வுகள், பிராந்திய, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட பிற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை உண்டாக்கியது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ தினம் கொண்டாடப்பட்டது.[6].

மேற்கோள்கள்

  1. "World Prematurity Day". WHO/PMNCH. Retrieved 29 January 2014.
  2. Born Too Soon: The Global Action Report on Preterm Birth. World Health Organization.
  3. https://preview-reproductive-health-journal.biomedcentral.com/articles/10.1186/1742-4755-10-S1-S1
  4. "World Prematurity Day". EFCNI. Retrieved 29 January 2014.
  5. https://www.timeanddate.com/holidays/world/prematurityday
  6. "World Prematurity Day". EFCNI. Retrieved 29 January 2014.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya