குறைப்பிரசவம்
மனிதர்களில் குறைப்பிரசவம் (preterm birth) என்பது கருக்காலம் (gestational age) 37 கிழமைகளாவதற்கு முன்னரே குழந்தை பிறப்பதாகும்.[1] அனேகமான சூழ்நிலைகளில், இதற்கான காரணம் தெளிவற்றதாகவும், அறியாததாகவும் இருக்கும். பல காரணிகள் இந்த குறைபிரசவத்துக்கு காரணமாக இருப்பதுடன், அவற்றை கட்டுப்படுத்துவதும் கடினமாகும். இந்த குறைப்பிரசவம் என்ற சொல்லும், முற்றாப்பிரசவம் (premature birth) என்ற சொல்லும் இணைப்பெயர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. முற்றாப் பிரசவம் என்னும்போது, குழந்தையானது பிரசவத்தின் பின்னர் வெளிச் சூழலில் உயிருடன் இருந்து, வளரவும், விருத்தியடையவும் தேவையான அளவில் குழந்தையின் உறுப்புகள் விருத்தியடைய முன்னரே குழந்தை பிறத்தலைக் குறிக்கும். முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி, உளவியல் விருத்தி என்பன ஆற்றலற்றதாகவோ, தடைகளைக் கொண்டதாகவோ இருப்பது உட்பட பல விதமான குறுகியகால, நீண்டகால இடர்களைக் கொண்டதாக இருக்கும். முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதில் பலவிதமான மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், குறைப்பிரசவம் நிகழ்வதைக் குறைப்பது இன்னமும் முடியாமலேயே உள்ளது[8]. குறைப்பிரசவமே, முற்றாப்பிரசவத்துக்கு பொதுவான காரணமாகும். அத்துடன் வளர்ந்துவரும் நாடுகளில் முற்றாப்பிரசவக் குழந்தைகளுக்கான போதிய பராமரிப்பு வழிகள் இல்லாமையால் குழந்தை இறக்கும் நிலைக்கும் செல்ல வேண்டியதாகி விடுகின்றது. வகைப்பாடு![]() மனிதர்களில் 37 வாரங்களுக்கு முதல் குழந்தை பிறப்பு நிகழுமாயின் அது குறைப்பிரசவம் எனப்படும்.[9] மனிதரில், முதிர்கருவினுள் உடல் உறுப்புக்கள், மற்றும் தொகுதிகள் 34 - 37 கிழமைகளுக்கு இடையிலேயே முழுமையாக விருத்தியடையும் என்பதனால், 37 கிழமைகளிலேயே முழு விருத்தியடைந்த நிலையை முதிர்கரு எட்டும். குறைப்பிரசவத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் முக்கியமான ஒரு உள்ளுறுப்பு நுரையீரல் ஆகும். இதுவே இறுதியாக விருத்தியடையும் உள்ளுறுப்பு ஆதலால், குறைபிரசவக் குழந்தைகள், பொதுவாக முதல் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனேயே உயிர் வாழுகின்றன. அந்தக் குழந்தைகள் குறைவிருத்தி கொண்டனவாக இருக்கின்றன. 37 கிழமையை அண்மித்துப் பிறக்கும் குழந்தைகளில் நுரையீரல் போதியளவு, மேற்பரப்புச் செயலியை விருத்தியடைந்த நிலையில் கொண்டிருப்பின், அதிக பிரச்சனைகள் இன்றி தப்பிப் பிழைக்கின்றன. இந்த மேற்பரப்புச் செயலியானது ஒவ்வொரு மூச்சுக்கும் இடையில் நுரையீரல் விரிந்த நிலையில் இருக்க உதவும். குறைப்பிரசவத்தைத் தவிர்ப்பதனால் மிக அதிகரித்த அளவிலும், முதிர்கருவின் விருத்தியைத் தூன்Dஉம் சில மருந்துகள் கொடுப்பதன் மூலம் சிறிய அளவிலும் குறைவிருத்தி நிலைகள் குறைவான நிலையில் வைக்கப்படுகின்றன. அறிகுறிகள்குறைப்பிரசவத்தின் அறிகுறிகளாக 10 நிமிடங்களுக்குக் குறைவான இடைவெளியில் கருப்பை சுருங்கி விரியும் செயல்முறை நிகழ்தல், யோனியிலிருந்து திரவம் வெளியேறல் என்பன இருக்கின்றன.[10] குறைப்பிரசவக் குழந்தைகளில் [[பெருமூளை வாதம், கேள்விக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முறையான விருத்தி தள்ளிப் போதல் போன்ற சூழிடர்கள் ஏற்படும்.[1] இத்தகைய சூழிடர்கள் குழந்தை எவ்வளவு முன்பாகப் பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக இருக்கும்.[1] காரணிகள்குறைப்பிரசவத்திற்கான சரியான காரணம் அறியப்பட்டிருக்கவில்லை.[2] ஆயினும், இதற்கான சூழிடர் காரணிகளாக நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறத்தல், உடற் பருமன், குறைந்த உடல் நிறை, யோனியழற்சிகள், புகையிலை பிடித்தல், மன அழுத்தம் என்பன இருக்கலாம் என அறியப்படுகின்றன.[3][7] தடுப்பு முறையும் சிகிச்சையும்![]() வேறு மருத்துவத் தேவைகள் அற்ற நிலையில் 39 ஆவது கிழமைகளுக்கு முன்னர் பிரசவம் தூண்டப்படுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதும் 39 கிழமைகளுக்கு முன்னர் பரிந்துரைக்கப்படுவதில்லை.[2] en:Pre-eclampsia என்னும் நோய் நிலை, 39 கிழமைகளுக்கு முன்னர் குழந்தை பிறப்பிக்கத் தேவையான ஒரு மருத்துவத் தேவையாகும்.[11] குறைப்பிரசவத்திற்கான சூழிடரைக் கொண்டவர்கள் புரோஜெஸ்தரோன் என்னும் இயக்குநீரைச் சிகிச்சைக்காகப் பெறுவதன் மூலம் குறைப் பிரசவத்தைத் தவிர்க்கலாம்.[5] படுக்கையில் ஓய்வு எடுத்தல் குறைபிரசவத்தைத் தடுக்கும் என்பதற்கான ஆதாரம் இல்லை.[5][12] சரியான சிகிச்சையை வழங்குவதன் மூலம், கிட்டத்தட்ட 75% மான குறைபிரசவக் குழந்தைகள் உயிர்தப்ப வைக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகள் பிந்திப் பிறக்கும்போது அவற்றின் பிழைத்து வாழும் திறன் அதிகரிப்பதாகவும் அறியப்படுகின்றது.[2] கருக்காலத்தின் 24 - 37 கிழமைகளில் பிரசவம் நிகழும் பெண்களுக்கு en:Corticosteroid வழங்கிச் சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தை வாழும் திறனை அதிகரிக்கலாம்.[6][13] நிப்பிடிப்பீன் (nifedipine) போன்ற மருந்துகள் வழங்கப்படுவதனால், பிரசவத்தைச் சிறிது பின்போட்டு, தாயை போதியளவு மருத்துவ வசதிகள் கொண்ட இடத்திற்கு இடம் மாற்றுவதற்கான நேரத்தை எடுத்துக் கொள்வதனால், நிலமையை முன்னேற்றலாம்.[14] குழந்தை பிறந்த பின்னர், குழந்தையை தோலுடன் தோல் படும்வண்ணம் வைத்துச் சருமத்தைச் சூடாக வைத்திருப்பதன் மூலமும், தாய்ப்பாலூட்டல் மூலமும், ஏதாவது தொற்றுநோய்கள் ஏற்படின், அவற்றை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதன் மூலமும், குழந்தைக்கு மூச்சுவிடல் செயலுக்கு உதவிச் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலமும் நிலைமையைச் சரி செய்யலாம்.[2] புறப்பரவலியல்உலகளவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பிற்கு மிக முக்கிய காரணமாக இந்த குறைப்பிரசவம் அமைகின்றது.[1] ஆண்டொன்றிற்கு கிட்டத்தட்ட 15 மில்லியன் குழந்தைகள் இவ்வாறு இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது (இது 5-18 % பிரசவங்களில் நிகழ்கின்றது).[2] அண்ணளவாக 0.5% மான குழந்தைகள் மிகவும் முன்னதாகப் பிறப்பதாகவும், அவையே அதிகளவில் இறப்புக்கு உள்ளாவதாகவும் அறியப்படுகின்றது.[15] அநேகமான நாடுகளில் இவ்வகையான குறைப்பிரசவங்கள் 1990 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரித்துக் காணப்பட்டது.[2] குறைப்பிரசவத்தால் நிகழும் மேலதிக சிக்கல்களால் 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 1.57 மில்லியன் குழந்தை இறப்பு, பின்னர் 2015 இல் 0.81 மில்லியனாகக் குறைந்தது.[7][16] குறைப்பிரசவம் 22 ஆம் கிழமையில் நிகழுமாயின், குழந்தை தப்பிப் பிழைப்பதற்கான சாத்தியம் 6% மாகவும், 23 கிழமையெனில் 26% மாகவும், 24 கிழமையெனில் 55% மாகவும், 25 ஆவது கிழமையெனில் 75% மாகவும் இருக்கின்றது.[17] நீண்டகால பிரச்சனைகள் எதுவுமில்லாத தப்பிப் பிழைத்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றது.[18] அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia