உஷா மங்கேஷ்கர்
உஷா மங்கேஷ்கர் (Usha Mangeshkar)(மராத்தி: उषा मंगेशकर, Hindi: उषा मंगेशकर) இந்தியப் பாடகி. இவர் பல பாடல்களை இந்திய மொழிகளான இந்தி, வங்காளம், மராத்தி, கன்னடம், நேபாளம், போஜ்பூரி, குஜராத் மற்றும் அஸ்ஸாம் மொழியில் பாடியுள்ளார். வாழ்க்கைக் குறிப்புஇவர் பண்டிட்தீனாநாத் மங்கேஷ்கர் - ஷெவந்தி (சுதாமதி) தம்பதியின் இரண்டாவது மகளாவார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் மீனா கடீகருக்கு இளைய சகோதரியாவார். பிரபல இசை இயக்குநர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர் இவரது சகோதரன். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட "ஜெய் சந்தோஷி மா" என்னும் திரைப்படத்தில் பக்தி பாடல்களைப் பாடியதின் மூலமாக பிரபலமடைந்தார்.[1] அப் படத்தில் பாடிய "மைன் டு ஆர்தி" பாடலுக்காக பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். தொழில்உஷா மங்கேஷ்கர், ஓவியம் வரைவதில் ஈடுபாடு உடையவர். இவர் "பிஞ்ஞாரா" மராத்தி மொழியில் வெளிவந்த திரைப்படத்தில் "முங்லா" எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியப்படுகிறார். "பூல்வந்தி" என்கிற தொலைக்காட்சித் தொடரை தயாரித்துள்ளார். விருதுகள் மற்றும் பரிந்துரைகள்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருது பிஎஃப்ஜேஏ விருதுகள் "ஜெய் சந்தோஷி மா" (1975) படத்தில் பாடியதற்காக இவருக்கு கிடைத்தது[2]. பிரபலமான பாடல்கள்
மராத்தி மொழியில் வெளியான "பிஞ்ஞாரா" படத்தில் இவர் பாடிய "தகல லக்லி கலா", மற்றும் "தும் ஹவார் கேலி மி மர்ஜி பகர்" பாடல்கள் புகழ் பெற்றவை. . மேற்கோள்கள்வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia