ஊர் மரியாதை
ஊர் மரியாதை 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், நெப்போலியன், ஆனந்த், சசிகலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஆர். பி. சௌத்ரி தயாரித்தார்.[1][2] கதைச்சுருக்கம்ரத்தினவேலு (சரத்த்குமார்) கிராமத்தில் மதிப்பு மிக்க நல்ல மனிதர்.வீரபாண்டியன் (நெப்போலியன்) பெண்பித்தராகவும் அனைவராலும் வெறுக்கப்படும் நபராகவும் இருக்கிறார். ரத்தினவேலு தனது சகோதரி மகள் ராசாத்தியை (சசிகலா) விரும்புகிறார் அதே வேளையில் அவரது உறவுப்பெண் காமாட்சி (சிந்து) ரத்தினவேலுவை விரும்புகிறார். இதனிடையில் நகரத்தில் படித்துவிட்டு வீரபாண்டியனின் சகோதரர் கண்ணன் (ஆனந்த்) ஊருக்கு வருகிறார். அவரும் ராசாத்தியை காதலிக்கிறார். இதற்கு முன்பாக, ராசாத்தியின் தந்தை சின்னராஜா (விஜயகுமார்) ஊரில் பட்டயம் கட்டப்பட்டு சிறந்த மனிதராக கவுரவிக்கப்படுகிறார். இது வீரபாண்டியின் தந்தை முத்துபாண்டிக்கு பிடிக்கவில்லை. சின்னராஜாவின் மீது வன்மம் கொண்டு அவரை கொல்ல முயல்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்து விடுகின்றனர். கண்ணனுக்கும் ராசாத்திக்கும் உள்ள காதலை அறிந்த ராசாத்தியின் தாய் (ஸ்ரீவித்யா) ரத்தினவேலுவிற்கு ராசாத்தியை மணம் முடிக்கிறார். மறுநாள் கண்ணன் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்துவிடுகிறார். ராசாத்தி அதிர்ச்சி அடைகிறாள். வீரபாண்டியன் ராசாத்தியின் குடும்பத்தின்மீது வன்மம் கொண்டு பழி தீர்க்க நினைக்கிறார், அடுத்து என்ன நடந்தது எனபது படத்தின் உச்சபட்ச காட்சியாகும். நடிகர்கள் -பாத்திரங்கள்
இசைக்கோர்ப்பு விவரங்கள் :
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia