கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்தவர். இயக்குநர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.[1]