ஊழியன் (திரைப்படம்)
ஊழியன் (Uzhiyan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் பாண்டியன் நடித்த இப்படத்தை சி. துரைபாண்டியன் இயக்கினார். வினிதா ,சரத் பாபு, மன்சூர் அலி கான், சனகராஜ், மோகன் நடராஜன், கீதா (நடிகை), விஜய சந்திரிகா மற்றும் தாக்ஷாயினி ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இப்படத்தை லஷ்மிகரன் தயாரிக்க மனோஜ் சரண் இசைக்க 4 மார்ச் 1994இல் வெளிவந்தது. இது தெலுங்கு மொழியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3] கதைஇந்தத் திரைப்படம் திலகன் (அருண் பாண்டியன்) இராணுவ வீரர்களால் துரத்தப்படுவதிலிருந்து தொடங்குகிறது. திலகன் அவரது உயர் இராணுவ அதிகாரிகளை தாக்கி ,ஆயுதங்களுடன் ஓடிவிட்டதாக சாட்சிகள் கூறுகிறது. திலகன் இராணுவத்தால் தேடப்படுகிறார். இராணுவ அதிகாரிகள் விசாரணையில், அவரது சகோதரியும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்படுகிறது. இராணுவ உயர் அதிகாரி ஆனைக்கல் ராஜ் (சரத் பாபு) திலகனை ஒரு நேர்மையான மற்றும் துணிச்சலான வீரர் என்ற காரணத்தால் இவ்விசாரணை மேற்கொள்ள எண்ணுகிறார். பின்னர், அவரும் மற்றும் இராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, காட்டில் திலகனைக் கண்டுபிடிக்கின்றனர், ஆனால் ,கனகா (வினிதாவின்) உதவியுடன் திலகன் தப்பித்து விடுகிறார். விசாரணையில், திலகனின் நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறதென தெரிகிறது. திலகன் எவ்வாறு இராணுவ வீரராகிறார் என்பதும், அங்கே அவருக்கு என்ன நேர்ந்தது என்பதும் மீதிக்கதை சொல்கிறது. நடிப்புஅருண் பாண்டியன் - திலகனாக இசை
மனோஜ் சரண் இசையமைத்துள்ளார். 5 பாடல்கள் கொண்ட ஒலித்தொகுப்பு 1994இல் வெளிவந்தது, இப்படத்தின் பாடல்களை இயக்குநர் அரவிந்தராஜ் எழுதியுள்ளார்..[4][5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia