எங்கள் தங்க ராஜா
எங்கள் தங்க ராஜா (Engal Thanga Raja) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை வி. பி. ராஜேந்திர பிரசாத் தயாரித்து இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்தனர்.[2] இது 1972 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான மானவுடு தானவுடுவின் மறுஆக்கம் ஆகும்,[3] மேலும் இது 1886 ஆம் ஆண்டு ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் எழுதிய ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் என்ற புதினத்தை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டது.[4] நடிப்பு
இசைகே. வி. மகாதேவன் இசையமைக்க கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[5] "இரவுக்கும் பகலுக்கும்" பாடல் மிகவும் பிரபலமான ஒன்றாக ஆனது.[6]
வரவேற்பு"நாகேஷ் நகைச்சுவைக் காட்சிகளில் சுடர்விட்டு பிரகாசிக்க, மனோகர் சண்டைக் காட்சிகளில் ஜமாய்கிறார்" என்று கல்கியின் காந்தன் குறிப்பிட்டார்.[3] இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia