எச். சி. வேணுகோபால்

எச். சி. வேணுகோபால்

பிறப்புஇந்திய ஒன்றியம், கர்நாடகம், பெங்களூர் தொட்டபள்ளாபுரா வட்டம்
மற்ற பெயர்கள்எச். சி. வேணூ
பணிஒளிப்பதிவாளர்

எச். சி. வேணுகோபால் (H. C. Venugopal) என்பவர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குறிப்பாக கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பணியாற்றிவருகிறார்.

தொழில்

கன்னட படங்களில் முக்கியமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் எச். சி. வேணுகோபால், 1990 களின் பிற்பகுதியிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ஏ (1998), ஸ்பர்ஷா (1999), எச் 2 ஓ (2002), ஆ தினகலு (2007), ஜக்கு தாதா (2016) உள்ளிட்ட கன்னட படங்களில் தொடர்ந்து பசியாற்றியுள்ளார்.[1] முதல் 3 டி கன்னடத் திரைப்படமான கட்டாரி வீர சூரசுந்தராங்கி (2012) படத்தின் ஒளிப்பதிவிலும் இவர் ஈடுபட்டார்.[2]

அண்மைய ஆண்டுகளில், அர்ஜுனின் இருமொழி படங்களான ஜெய்ஹிந்த் 2 (2014) மற்றும் பிரேம பரஹா (2018) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை

வேணுகோபால் நடிகையும், அரசியல்வாதியுமான தாராவை 2005 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா (பி. 2013) என்ற மகன் உள்ளார்.[5]

குறிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya