ஜெய்ஹிந்த் 2
ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அபிமன்யு என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியான பன்மொழித் திரைப்படம். இப்படத்தை அர்ஜுன் இயக்கி , நடித்துத் தயாரித்தார்.[1] இப்படம் 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.[2][3] இப்படம் "கர்நாடக மாநில விருது - சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு" பெற்றது.[4] கதைச்சுருக்கம்ஐந்து நபர்களின் கதையைக் கூறுகிறது. குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடக்கூடிய ஒருவனின் போராட்டமே படத்தின் கதை. ஏழைப்பெண்ணான பார்வதி (யுவினா பர்தாவி) நகரத்தின் சிறந்த பள்ளியில் சேர்க்கை கிடைக்கப் பெறுகிறாள். அவளுடைய கல்விச்செலவுக்காக அவள் தந்தை தன் சிறுநீரகத்தை விற்கிறார். ஆனாலும் அவள் பள்ளிக்கட்டணத்திற்குத் தேவையான பணத்தை செலுத்த இயலாததால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த நிகழ்வு அபிமன்யுவின் (அர்ஜுன்) மனதை வெகுவாகப் பாதிக்கிறது. கல்வி கட்டணங்கள் உயர்வின் காரணமாக ஏழைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறையை சிந்திக்கிறார். தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான விதிகளை அரசிற்குப் பரிந்துரைக்கிறார். அந்த விதிகளாவது: அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்க வேண்டும். மிகக் குறைவான கல்விக்கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வியை சேவையாகக் கருதவேண்டும் தவிர அதை தொழிலாகக் கருதக்கூடாது. தரமான கல்வியை நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உறுதிசெய்ய வேண்டும். அபிமன்யுவின் செயல்திட்டங்கள் தனியார் பள்ளிகளுக்கு பாதகமானதாக இருப்பதால் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அபிமன்யுவிற்கு எதிரான சதியைத் தொடங்குகின்றனர். அவர்களின் சாதியை முறியடித்து அபிமன்யு எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே மீதிக்கதை. நடிகர்கள்
இசைஅனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் அர்ஜுன் ஜன்யா.
வெளியீடுதமிழ்ப் பதிப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஜீ தமிழ் தொலைக்காட்சியும், தெலுங்கு உரிமம் ஜெமினி தொலைக்காட்சியும், கன்னட உரிமம் கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியும் பெற்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia