எட்டுத்திக்கும் பற
எட்டுத்திக்கும் பற (Ettuthikkum Para) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கீரா இயக்கிய இப்படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிதிஷ் வீரா, முனீஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படமானது இளவரசன் திவ்யா திருமணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தருமபுரி கலவரத்தையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த இளவரசன் மரணத்தையும் தாக்கமாக கொண்டு எடுக்கபட்டது.[2] சுருக்கம்சமூக ஆர்வலரான அம்பேத்கர் ( சமுத்திரக்கனி ) அரசாங்கத்தின் இருண்ட பக்கங்களை கண்டறியும் பணியில் ஈடுபடுகிறார். இதனால், அவரது மகனும் நண்பர்களும் கொல்லப்படுகிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் ( நிதிஷ் வீரா ) உயர் சாதிப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் ( சாந்தினி தமிழரசன் ) தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்து கொள்ள சென்னை செல்கிறார். இரண்டு மூத்த குடிமக்கள் அவர்கள் இறக்கும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். தனது மகனின் உயிரைக் காப்பாற்ற பட்டாக்கதிக்கு ( முனீஷ்காந்த் ராமதாஸ் ) ரூ .20,000 தேவை. இந்த ஐந்து தனித்தனி கதைகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது மீதமுள்ள கதையாகும். நடிகர்கள்
தயாரிப்புமுன்னதாக பச்சை என்கிற காத்து (2012), மெர்லின் (2018) ஆகிய படங்களை இயக்கிய கீரா இந்த படத்தை இயக்கியுள்ளார், இது கௌரவக் கொலைகள் பற்றியது. இத்திரைப்படத்தின் பணிகளானது 2018 இல் பற என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் இது ஒரு சாதியின் பெயரை ஒத்ததாக இருப்பதால் எட்டுத்திக்கும் பற என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமானார்.[3] இந்த படம் பன்னிரண்டு மணிநேர காலப்பகுதியில் நடைபெறுவதாகவும், தற்செயலாக ஒன்று சேரும் பல்வேறு வகையான மனிதர்களைச் சுற்றியதாகவும் உள்ளது. இப்படம் வட சென்னை மற்றும் நாகர்கோவில் படமாக்கப்பட்டது.[4] சாதியை அடிப்படையாகக் கொண்ட கௌரவக் கொலைகளின் எதிர்மறை அம்சங்களை படம் எடுத்துக்காட்டுகிறது.[5] இசைபாடல்களுக்கு எம். எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளார்.
வெளியீடுஇப்படம் 2020 மார்ச்சில் வெளியிடப்பட்டது.[6] தினமலர் படத்திற்கு ஐந்து புள்ளிகளில் ஒன்றை வழங்கியது.[7] மலை மலரின் விமர்சகர் ஒருவர் படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia