சமுத்திரக்கனி (Samuthirakani) இந்தியாவின்தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர் மற்றும் நடிகராவார். 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றியதுடன் தமிழ் படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். பார்த்தாலே பரவசம் படத்தில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். விசாரணை திரைப்படத்திற்காக 2016 இல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[2][3]