எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவாட்டு ஆகும்.[1] இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.[2][3] எனினும், 1000 மெகாவாட்டு திறன் உலையின் கட்டுமான பணிகள் 2007இல் தொடங்கின.[4][5][6] இந்நிலையத்தில் தற்போது இரண்டு 60 மெகாவாட் உலையும் மூன்று 110 மெகாவாட் உலையும் அமைந்துள்ளன. கூடுதலாக 500 மெகாவாட் உற்பத்தி உலை நிறுவ பரிந்துரைக்கபட்டு கட்டுமான பணிகள் தொடங்கபட்டன.[7] இந்நிலையத்தின் மொத்த மதிப்பு 270 கோடி ரூபாய் ஆகும்.
அம்சங்கள்
மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நிலையமாக திகழும் இதன் உற்பத்தி திறன் அண்மைய ஆண்டுகளில் மேம்படுத்தபட்டுள்ளது.[8]தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது.[1][9] மேலும், கழிவுகளை சுத்திகரித்து முறையாக வெளியேற்ற சிறப்பு அமைப்புக்களை கொண்டுள்ளது.[10]
இயக்கத்திற்கு தேவையான நிலக்கரி MCL (தல்கர் மற்றும் எல்பி பள்ளத்தாக்கு), ஒரிசா மற்றும் ECL, ரணிகஞ்சு , மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகிறது. 2008–2009 ஆண்டின் கொள்திறன் காரணி (plant load factor) 49.17 சதவிகிதம் ஆகும்.[11]
எண்ணூர் மின் நிலையத்தில் மேம்படுத்தல் நடைபெறுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.[12][13] இந்த புதிய திட்டம் அண்மைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்நிலையத்தின் உற்பத்தியை பெருக்க வடிவமைக்கபட்டது. இத்திட்டத்தில் நுட்ப நடைமுறைபடுத்தல் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[14] எனினும் அண்மைய வருடங்களில் தமிழ்நாட்டில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையால், இந்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தபடுகிறது.[15]