என்னு நின்டே மொய்தீன்
![]() என்னு நின்டே மொய்தீன் (Ennu Ninte Moideen) மலையாள மொழியில் வெளியான வாழ்க்கை வரலாற்று காதல் திரைப்படமாகும்.[3] 1960-70களில், கேரளத்தில் உள்ள முக்கம் எனும் ஊரில், இந்து சமயத்தின் உயர்குடியில் பிறந்த காஞ்சனமாலை, புகழ்பெற்ற இசுலாமிய குடும்பத்தைச் சார்ந்த மொய்தீன் எனும் இருவருக்கும் இடையே மூண்ட காதல் கதையை இயக்குநர் ஆர்.எஸ். விமல் எழுதி இயக்கியிருந்தார்.[4][5] இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், பார்வதி மேனன் ஆகியோர் மொய்தீன் மற்றும் காஞ்சனமாலா என்ற தலைப்பு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டோவினோ தாமசு, பாலா, சாய்குமார், சசிகுமார், லீனா ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர்.[6][7] படத்திற்கு எம். ஜெயசந்திரன், இரமேஷ் நாராயண் ஆகிய இருவரும் இசையமைத்தனர்.[8] பின்னணி இசையை கோபி சுந்தர் அமைத்தார். ஒளிப்பதிவு ஜோமன் டி. ஜான் மேற்கொண்டார்.[9] படம் வெளியானதும், ஒரு நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும், வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாகும். இது திரையரங்கில் ₹ 50 கோடிக்கு மேல் வசூலித்தது.[10][11] கதைப்போக்குமொய்தீன் ஒரு சமூக அரசியல் ஈடுபாட்டாளராகவும், காஞ்சனமாலை மருத்துவம் பயிலும் துணிவு நிறைந்த மாணவியாகவும் இருக்கின்றனர். இவர்களுக்குள் அஞ்சல்கள் வழியே காதல் மலர, இருவரும் அவர்களுக்கென அஞ்சல் மொழியையும் வளர்த்துக்கொண்டனர். ஒருபுறம், காஞ்சனமாலையின் காதல் பழங்கால கட்டுப்பாட்டு குணங்கள் மிகுந்த அவளது உறவினர்களுக்கு அறியவரும்போது, அவளை தாக்குகினர். மறுபுறம், மொய்தீனின் தந்தை அவனது காதலை ஏற்க மறுத்து, கத்தியால் குத்திவிட்டு, காவலர்களிடம் ஒப்புக்கொண்டு சிறைச்செல்கிறார். எப்பாடோ, மொய்தீன் உயிர் பிழைத்துக் கொள்கிறான். நீயதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போது, மொய்தீன், நடந்தது அனைத்தும் விபத்து மட்டுமே, தனது தந்தைக்கும் இதற்கும் ஏது தொடர்புமில்லை எனக்கூறி தந்தையை காப்பாற்றுகிறான். மகனது இம்மனம் நெருடும் செயல், தந்தையின் மென்குணத்தை வெளிகொண்டுவருகிறது. எனினும், அவனது தந்தை மறுநாளே, தனது உயிரை துறக்கிறார். கடைசியில், மொய்தீனும் காஞ்சனமாலையும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்கின்றனர். கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டு திரும்ப வரும்போது, அவன் பயணம் செய்த படகு நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு கவிழ்த்துவிட, மற்ற உயிர்களை காத்து கடைசியில் தனது உயிரை துறக்கிறான் மொய்தீன். இதனை அறிந்த காஞ்சனமாலை தன்னுயிர் மாய்த்துக்கொள்ள முயலும்போது, மொய்தீனின் தாயாரால் காப்பாற்றப்பட்டு, அவளை தனது வீட்டிற்கே கூட்டிச்செல்கிறார். காஞ்சனமாலை அங்கே ஒரு கைம்பெண்ணாக இருந்துவருகிறார். கதாபாத்திரங்கள்
உருவாக்கம்இக்கதை இருவஞ்சிப்புழை ஆறு மற்றும் முக்கம் சிற்றூரை கதைக்களமாக கொண்டுள்ளது. இயக்குநர் விமல், முதலில் கோப்பு படமாக உருவாக்க எண்ணி, ஈற்றில் முழுநீள திரைப்படமாக உருவாக்கினார். 2014யில், காஞ்சனமாலா "கதை சரியாக அமைக்கப்படவில்லை" என்று இயக்குநர் மீது புகார் தொடுக்கப்பட்டது. ஒலிப்பதிவுஇப்படத்தின், "முக்கத்தே பெண்ணே" எனும் பாடல் 5 நிமிடங்களில் தொடுக்கப்பட்டது. மேலும், "காத்திருன்னு" எனும் பாடலை இயற்றியதற்காக, ம. ஜெயச்சந்திரன் நாட்டின் சிறந்த இசையமைப்புக்கான விருதைப்பெற்றார்.[12]
வெளியீடுகேரளாவினுள் 19 செப்டம்பர் 2015-லும், கேரளாவின் வெளியே 2 அக்டோபரிலும் வெளியானது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை, ஏசியநெட் 7 கோடி மதிப்பீட்டில் பெற்றது. இதுவரை, மலையாள உலகில், இவ்வுயர் தொகைக்கொண்டு பெறப்பெற்ற திரைப்படம் இதுவேவாகும். திரைப்பட விழா திரையிடல்கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.கே) 20 வது பதிப்பின் மலையாள சினிமா டுடே பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு படங்களில் இந்த படம் ஒன்றாகும்.[13] இருப்பினும், போட்டிப் பிரிவில் சேர்க்கப்படாததால் படத்தை திருவிழாவிலிருந்து விலக்க இயக்குநர் ஆர்.எஸ்.விமல் முடிவு செய்தார்.[14] விருதுகள் மற்றும் பரிந்துரைகள்28 மார்ச் 2016 நிலவரப்படி, என்னு நின்டே மொய்தீன் 55 வெற்றிகளையும், 63 பரிந்துரைகளையும் பெற்றது மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia