என். டி. வானமாமலை
என். டி. வானமாமலை தமிழ்நாட்டின் மூத்த குற்றவியல் வழக்கறிஞரும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். அக்டோபர் 1984ல் இந்திராகாந்தி படுகொலையால் சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதடி வென்றவர். தமது 84வது அகவையில் உடல்நலக்குறைவால் வானமாமலை 28 மே 2006 அன்று சென்னையில் மறைந்தார்.[1] இவர் இறக்கும் போது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரன்-பேத்திகள் உடனிருந்தனர். இளமைநாங்குநேரி தொழிலதிபர் திருமாலாச்சாரிக்கு பிறந்த என். டி. வானமாமலை, மாநிலக் கல்லூரி, சென்னையில் வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். 1943ல் சென்னையில் மூத்த குற்றவியல் வழக்கறிஞரான கே. பி. பாலாஜியிடம் தொழில் பழகுநராக பணியாற்றினார். 1973ல் மூத்த வழக்கறிஞரான வானமாமலை தனக்கு வந்த தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவியை ஏற்க மறுத்தார். 1967 எம்.ஜி. ஆர். சுடப்பட்ட வழக்கில் இவர் மோகன் குமாரமங்கலத்துடன் இணைந்து வாதாடியவர். 1943ல் வானமாமலை இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் இணைந்து, தொழிலாளர்களுக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் வாதாடினார். 1950ல் வானமாமலை நடத்திய போராட்டத்திற்காக 3 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். நூல்கள்
மரபுரிமைப் பேறுகள்மறைந்த என். டி. வானமாமலை நினைவாக அவரது மகள் அகோலா, தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகத்தில் (National Law School of India University) என். டி. வானமாமலை உதவித்தொகை நிறுவினார். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia