எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்:நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்விகள் (அறிக்கை)![]() எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தோல்விகள் ( When will they get justice? Failures of Sri Lanka's Lessons Learnt And Reconcillation Commission) என்பது செப்டம்பர் 7, 2011 அன்று அனைத்துலக மன்னிப்பு அவை வெளியிட்ட அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 69 பக்கங்களை உடையது. இது தொடர்பான செய்திகள் பிபிசி, ராய்ட்டர்சு, எ.எப்.பி உட்பட்ட பல அனைத்துலக ஊடகங்களிலும் வெளிவந்துருந்தன. உள்ளக விசாரணைக்கும் இணக்கப்பாட்டுக்கும் என்று கூறி இலங்கை அரசு நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எல்லா நிலைகளிலும் அடிப்படைக் குறைபாடுகளை உடையது என்றும், ஆணைக்குழு செப்டம்பர் 2011 வெளியிட்ட அறிக்கையில் பொறுப்புடைமை தொடர்பாக ஒரு பரிந்துரையத் தானும் முன்வைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்தது.[1] காலம் காலமாக இலங்கை அரசுகள் நியமித்த எந்தவொரு ஆணைக்குழுதானும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி, இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஏற்ப ஒரு சுதந்திர அனைத்துலக விசாரணை தேவை என்று இந்த அறிக்கை கோருகிறது. இந்தக் கோரிக்கையை செப்டம்பரில் கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் அவைக்கு முன்வைக்கிறது. குறிப்பான குற்றச்சாட்டுக்கள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia