எம்எம்ஆர் தடுப்பு மருந்து
![]() எம்எம்ஆர் தடுப்பு மருந்து (எம்எம்ஆர் தடுப்பூசி, MMR vaccine, இதன் இலத்தீன் பெயர்களை அடிப்படையாக கொண்டு எம்பிஆர் தடுப்பு மருந்து MPR vaccine எனவும் அழைக்கப்படுகிறது) தட்டம்மை தாளம்மை மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இம்மருந்தில் ஆற்றல் குறைவான உயிருள்ள மூன்று நோய்களின் தீநுண்மம் கலவையாக இருக்கும். இம்மருந்து ஊசி மூலம் செலுத்தப்படக்கூடியது. தட்டம்மைக்கான மருந்தை முதலில் மௌரிச் இல்மேன் என்பவர் மெர்க் நிறுவனத்தில் பணியாற்றிய போது கண்டறிந்தார்.[1] தட்டம்மைக்கான தடுப்பு மருந்து உரிமம் மூலம் முதலில் 1963 ஆம் ஆண்டு பொது சந்தையில் கிடைத்தது. 1968ஆம் ஆண்டு மேலும் முன்னேறிய மருந்து அறிமுகமாகியது. தாளம்மைக்கான மருந்து 1967 ஆம் ஆண்டும் மணல்வாரிக்கான மருந்து 1969 ஆம் ஆண்டும் கிடைக்க தொடங்கின. மூன்று தடுப்பு மருந்துகளும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் என்ற பெயரில் தரப்படுகிறது.[2] இம்மருந்து பொதுவாக ஒரு வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் முறை வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை பள்ளிக்கு செல்லும் முன் வழங்கப்படுகிறது. முதல் முறை வழங்கப்படும்போது குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வருவதில்லை அதனாலேயே இரண்டாவது முறை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு இம்மருந்துக்கு அமெரிக்காவில் உரிமம் வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இரண்டாவது முறை மருந்து வழங்கும் முறை அறிமுகமானது.[3] உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகள் இதை பயன்படுத்துகின்றன. இது, எம்எம்ஆர், பிரியோரிக்ச், டிரெசிவக், டிரிமோவாக்ச் என்ற வணிகப் பெயர்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இம்மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாயினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில பெரியவர்களும் தரப்படுகிறது. சில எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் இம்மருந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தரப்படுகிறது.[4][5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia