எம்மி நோய்தர்
அமாலி எம்மி நோய்தர் (Amalie Emmy Noether)[a] , 23 மார்ச் 1882 – 14 ஏப்ரல் 1935) செருமானிய கணிதவியலாளர் ஆவார். சுருக்க இயற்கணித ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். கணித இயற்பியலில் அடிப்படையான நோதரின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றத்தை கண்டுபிடித்தார்.[1] பாவெல் அலெக்ஸாண்ட்ரோவ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜீன் டியூடோன், ஹெர்மன் வெயில் மற்றும் நார்பர்ட் வீனர் ஆகியோரால் கணித வரலாற்றில் "மிக முக்கியமான பெண்மணி" என்று வர்ணிக்கப்படுகிறார்.[2] இவரது காலத்தின் முன்னணி கணிதவியலாளர்களில் ஒருவராக, இவர் வளையம், களங்கள் மற்றும் இயற்கணிதங்களின் சில கோட்பாடுகளை உருவாக்கினார். இயற்பியலில், நோதரின் தேற்றம் சமச்சீர் மற்றும் காப்பு விதிகளுக்கு இடையிலான தொடர்பை விளக்குகிறது.[3] வாழ்க்கைபிராங்கோனிய நகரமான எர்லாங்கனில் யூதக் குடும்பத்தில் கணிதவியலாளர் மாக்ஸ் நோதர் என்பவருக்கு மகளாக பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கற்க திட்டமிட்டார். ஆனால் அதற்கு பதிலாக இவரது தந்தை விரிவுரை செய்து வந்த எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் கணிதம் படித்தார். பால் கோர்டனின் மேற்பார்வையின் கீழ் 1907-இல்[4] தனது முனைவர் பட்டத்தை முடித்த பிறகு, எர்லாங்கனின் கணித நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் ஊதியம் இல்லாமல் பணியாற்றினார். அந்த நேரத்தில், பெண்கள் பெரும்பாலும் கல்வி நிலைகளில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். 1915 ஆம் ஆண்டில், உலகப் புகழ்பெற்ற கணித ஆராய்ச்சி மையமான கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் சேர டேவிடு இல்பேர்ட்டு மற்றும் பெலிக்ஸ் க்ளீன் ஆகியோரால் அழைக்கப்பட்டார். இருப்பினும், தத்துவ பீடத்தினர் ஆட்சேபித்தனர். மேலும் இவர் ஹில்பர்ட்டின் பெயரில் நான்கு ஆண்டுகள் விரிவுரை ஆற்றினார். 1919 ஆம் ஆண்டில் இவரது குடியேற்றம் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் இவர் பிரைவேட்டோசென்ட் பதவியைப் பெற முடிந்தது.[4] பணிகள்1933 வரை கோட்டிங்கன் கணிதத் துறையின் முன்னணி உறுப்பினராக நோதர் இருந்தார்; இவரது மாணவர்கள் சில நேரங்களில் "நோதர் பாய்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். 1924 இல், டச்சுக் கணிதவியலாளர் பிஎல் வான் டெர் வேர்டன் இவருடன் சேர்ந்து, விரைவில் நோதரின் கருத்துகளின் முன்னணி விளக்கமளிப்பவராக ஆனார்; 1931 ஆம் ஆண்டு இவரது செல்வாக்குமிக்க பாடப்புத்தகமான மாடர்ன் அல்ஜிப்ராவின் இரண்டாம் தொகுதிக்கு அவரது பணி அடித்தளமாக அமைந்தது. 1932 ஆம் ஆண்டு சூரிக்கு நகரில் நடந்த அனைத்துலகக் கணித அறிஞர் பேரவையில் இவர் உரையாற்றிய நேரத்தில், இவரது இயற்கணித அறிவு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஜெர்மனியின் நாஜி அரசாங்கம் யூதர்களை பல்கலைக்கழக பதவிகளில் இருந்து நீக்கியது. இதனால் நோதர் அமெரிக்காவிற்குச் சென்று பென்சில்வேனியாவில் உள்ள பிரைன் மாவர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் மேரி ஜோஹன்னா வெயிஸ், ரூத் உள்ளிட்ட முனைவர் மற்றும் முதுகலை பட்டதாரிகளைப் பயிற்றுவித்தார். அதே நேரத்தில், நியூ செர்சியின் பிரின்ஸ்டனிலுள்ள மேம்பட்ட படிப்புக்கான நிறுவனத்தில் விரிவுரை மற்றும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டார்.[4] பிரபலமான நுண் இயற்கணிதம் என்ற நூலை எழுதியவர். அவரது சுருக்க இயற்கணித பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர். இவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க் களங்கள், என்ற தனது கருத்துக்களை வழங்கினார். இவரது "பரிமாற்ற விதி " இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும். 1908 முதல் 1919 வரை இவர் இயற்கணித மாற்றமிலிகள் குறித்தும் எண் புலங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவரது நோய்தரின் தேற்றம் "தற்கால இயற்பியல் மேம்பாடிற்கு மிகவும் துணைபுரிந்த மிக முதன்மையான கணிதத் தேற்றங்களில் ஒன்றாக" கருதப்படுகின்றது.[5] 1920 முதல் 1926 வரை அவர் பரிமாற்று வளையங்களில் சீர்மங்கள் குறித்த கருதுகோளை உருவாக்கினார். 1927–35 காலகட்டத்தில் பரிமாற்று வளையங்களைக் குறித்தும் அதிபர சிக்கலெண்கள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தவிரவும் பிற கணிதவியலாளர்களுக்கும் அவர்களது ஆய்விற்கு பல கருத்துருக்களை வழங்கி பல ஆய்வு கட்டுரைகளுக்கு வழிகாட்டியுள்ளார். குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: எம்மி நோய்தர்
|
Portal di Ensiklopedia Dunia