எம். கே. அசோக்
எம்.கே. அசோக் (M. K. Ashok) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்[1] தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியில் வைகை சந்திரசேகர் வெற்றிபெற்றார்.[2] 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் பொறுப்பற்று இருந்த காரணத்தினால் அதிமுக கட்சியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் எம்.கே. அசோக்கும் ஒருவர் ஆவார்.[3] 2015ஆம் ஆண்டு 22ஆம் நாள் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள புதுசுக்கம்பட்டி கிராமத்தில் நடந்த ஒரு விபத்தில் எம்.கே. அசோக், அவருடைய மனைவி, ஒரு உறவினர் ஆகியோர் காயம் அடைந்தனர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia