எம். பழனியாண்டி
மருதையா பழனியாண்டி (Maruthaiya Palaniyandi) (10 திசம்பர் 1918 - 9 மார்ச் 2005) ஒரு இந்திய அரசியல்வாதியாக மற்றும் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும் பின்னர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். [1] சொந்த வாழ்க்கைபழனியாண்டி 1918ஆம் ஆண்டு திசம்பர் 10ஆம் நாள் பிறந்தார். திருமதி எம். புனிதவள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு. அரசியல்பழனியாண்டி பத்தாம் வகுப்பு படிப்பை முடித்த பின், அரசியலில் நுழைந்து தொழிற்சங்கத் தலைவரானார். 1952ஆம் ஆண்டு லால்குடியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெரம்பலூர் மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். பழனியாண்டி 1957 முதல் 1962 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.1986 முதல் 1992 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1983 முதல் 1988 வரை இந்திய தேசிய காங்கிரசின் தமிழக குழுவின் தலைவர் ஆவார். 1996-ல் தமிழ் மாநில காங்கிரசில் ஜி. கே. மூப்பனாருடன் இணைந்தாா். இறப்பு2005 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் நாள் திருச்சியில் இறந்தார்.[2],[3] வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia