எய்டென் மார்க்ரம் (Aiden Markram, பிறப்பு 4 அக்டோபர் 1994) என்பவர் தென்னாப்பிரிக்க அணியின்துடுப்பாட்ட வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது.[2][3][4][5] 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆண்டின் 5 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[6][7]
பன்னாட்டுப் போட்டிகள்
வங்காளதேசத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதல் தேர்வு நூறை நூலிழையில் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ஓட்டங்கள் எடுத்தார்.[8]
அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார்.[9] இவர் 22 அக்டோபர் 2017 அன்று வங்களாதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், அதில் 66 ஓட்டங்கள் எடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.[10]
டிசம்பர் 2017இல், இவர் தனது இரண்டாவது தேர்வு நூறை எடுத்தார். இதன்மூலம் தனது முதல் மூன்று தேர்வுப் போட்டிகளில் இருமுறை நூறு எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]
ஒநாப தலைவர்
பிப்ரவரி 2018இல், தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவர் பாஃப் டு பிளெசீ விரல் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் (ஒநாப) மற்றும் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார்.[12] Markram was named as South Africa's captain for the remaining ODI fixtures in du Plessis' absence.[13] டு பிளெசீ இல்லாத நிலையில் மீதமுள்ள ஒநாப போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம் பெயரிடப்பட்டார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள், 123 நாட்களாக இருந்தது. இதன்மூலம் அவர் கிரேம் ஸ்மித்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய அணித்தலைவரானார்.[14]
ஆகஸ்ட் 2018இல், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் இவர் இடம்பெற்றார், எனினும் அந்தப் போட்டியில் இவர் விளையாடவில்லை.[15] மார்ச் 2019இல், இவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இ20ப அணியில் இடம் பெற்றார்.[16] அத்தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.[17]