எரெமோப்டெரிக்சு

எரெமோப்டெரிக்சு
ஆப்பிரிக்கா முதன்மை நிலப்பகுதிக் காணப்படும் ஆண் பெண் எரெமோப்டெரிக்சு சிற்றினங்கள்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எரெமோப்டெரிக்சு

காவுப், 1836
மாதிரி இனம்
பிரிஞ்சிலா ஒட்டோலூகா[1]
தெம்னிக், 1824
சிற்றினம்

அட்டவணையில்

பரவல் வரைபடம்
வேறு பெயர்கள்
  • கோராபிடிசு
  • மெகாலோடிசு
  • பைர்குலவுதா - ஆ. சுமித், 1839[2]

எரெமோப்டெரிக்சு (Eremopterix) என்பது அலௌடிடே குடும்பத்தைச் சேர்ந்த சிட்டுக்குருவி சிற்றினம் ஆகும். இந்த வானம்பாடி குருவிகள் ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் காணப்படுகின்றன.

வகைப்பாட்டியல்

தற்போதுள்ள இனங்கள்

எரேமோப்டெரிக்சு பேரினத்தில் தற்பொழுது பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[3]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
எரெமோப்டெரிக்சு ஆசுட்ராலிசு கருங்காது வானம்பாடி தெற்கு போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா
எரெமோப்டெரிக்சு கோவா மடகாசுகர் வானம்பாடி மடகாசுகர்.
எரெமோப்டெரிக்சு நிக்ரைசெப்சு கருந்தலை வானம்பாடி மவுரித்தேனியா மத்திய கிழக்கு வழியாக வடமேற்கு இந்தியா வரை
எரெமோப்டெரிக்சு லுகோடிசு கசுகொட்டை முதுகு வானம்பாடி சகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்கா
எரெமோப்டெரிக்சு கிரிசெசு சாம்பல் தலை வானம்பாடி தெற்காசியா
எரெமோப்டெரிக்சு சிக்னேட்டசு கசுகொட்டை தலை வானம்பாடி கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா
எரெமோப்டெரிக்சு வெர்டிகலிஸ் சாம்பல் முதுகு வானம்பாடி தெற்கு மற்றும் தெற்கு-மத்திய ஆப்பிரிக்கா
எரெமோப்டெரிக்சு லூகோபாரெயா பிசர் வானம்பாடி மத்திய கென்யா முதல் கிழக்கு சாம்பியா, மலாவி மற்றும் வடமேற்கு மொசாம்பிக்

முன்னாள் இனங்கள்

முன்னதாக, சில வகைப்பாட்டியலாளர்கள் பின்வரும் சிற்றினத்தினை (அல்லது துணையினம்) எரேமோப்டெரிக்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தனர்.:

  • அரேபிய வானம்பாடி (பைருகுலாடா எரிமோடைடிசு)

மேற்கோள்கள்

  1. "Alaudidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-16.
  2. Mlíkovský, Jirí (1998). "Generic name of southern snowfinches". Forktail 14: 85. http://www.orientalbirdclub.org/publications/forktail/14pdfs/Mlikovsky-Snowfinches.pdf. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nicators, reedling, larks". World Bird List Version 8.2. International Ornithologists' Union. Retrieved 15 July 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya