எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Ernakulam Junction) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பெரிய தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை எர்ணாகுளம் தெற்கு தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். இந்நிலையத்தின் குறியீடு இ.ஆர்.எசு ஆகும்.[1]) திருவனந்தபுரம் இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் அல்லாத தரம் 2 நிலையங்கள் என்ற வகைப்பாட்டில் எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் இடம்பெறுகிறது. [2] இது கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள முக்கிய இரயில் முனையமாகும். ஒரே நேரத்தில் 376 இரயில் பாதைகளைக் கட்டுப்படுத்தும் இந்நிலையம் தென்னிந்தியாவின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.[3] 2018–19 ஆம் காலத்தைய நிதியாண்டில் ₹158 கோடியும் 2023 ஆம் ஆண்டில் ₹196 கோடியும் ஈட்டி கேரளாவில் பயணிகள் வருவாயில் இரண்டாவது பெரியதாகவும், தெற்கு இரயில்வேயில் ஐந்தாவது பெரியதாகவும் இந்நிலையம் திகழ்கிறது.[4] எர்ணாகுளம் சந்திப்பு என்பது இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் புறநகர் அல்லாத தரம் -2 என வகைப்படுத்தப்பட்ட நிலையமாகும். திருவனந்தபுரம் இரயில்வே பிரிவின் கீழ் வருகிறது.[5] இது இந்தியாவின் முதல் முழுமையாக ஊனமுற்றோர் நட்பு இரயில் நிலையமாகும்.[6]
தொடர்வண்டிகள்
எர்ணாகுளச் சந்திப்பிலிருந்து கிளம்பும் வண்டிகள்:
மேலும் பார்க்க
மேற்கோள்கள்