எர்பர்ட் தம்பையா
நீதிபதி எர்பர்ட் தர்மராஜா தம்பையா (Herbert Dharmarajah Thambiah, 14 அக்டோபர் 1926 – 4 அக்டோபர் 1992) இலங்கையின் ஒரு முன்னணி நீதிபதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், இலங்கைத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். வாழ்க்கைச் சுருக்கம்தம்பையா 1926 அக்டோபர் 1926 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சி. ஆர். தம்பையா என்பவருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கல்கிசை சென் தோமசு கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1] பள்ளிப் படிப்பின் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1] சிறிது காலம் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர்[1] இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1954 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார்.[1] தம்பையா ரஞ்சி அப்பாத்துரை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சாவித்திரி என்ற ஒரு மகள் உள்ளார்.[1] பணிசட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறிய தம்பையா சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் நீதித் துறையில் இணைந்தார்.[1] 1978 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1984 இல் மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.[1] 1991 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா இவரை தலைமை நீதிபதியாக நியமித்தார்.[2] தம்பையா 1992 அக்டோபர் 4 அன்று தனது 65வது அகவையில் காலமானார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia