ரணசிங்க பிரேமதாசா
சிறீ லங்காபிமான்ய ரணசிங்க பிரேமதாசா (Ranasinghe Premadasa; சிங்களம்: රණසිංහ ප්රේමදාස; 23 சூன் 1924 – 1 மே 1993)[1] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1989 சனவரி 2 முதல் 1993 மே 1 வரை இலங்கையின் 3-வது (நிறைவேற்றதிகாரத்துடன் 2-வது) அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[2] முன்னதாக இவர் 1978 முதல் 1989 வரை ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.[3] 1986 இல் இவருக்கு சிறீ லங்காபிமான்ய என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா வழங்கிக் கௌரவித்தார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இப்பட்டம் வழங்கப்பட்டது.[4] பிரேமதாசா 1993 மே 1 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற மே நாள் பேரணி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார்.[5][6] இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia