எலிபெண்டா தீவு
எலிபெண்டா தீவு, இதனை காரபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் (Elephanta Island or Gharapuri Island or Pory Island[1]) மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். எலிபெண்டா தீவில் உள்ள எலிபண்டா குகைகளில் இந்து, பௌத்தக் குடைவரைக் கோயிலைக் கொண்டுள்ளது. மும்பை நகரத்தின் தென்கிழக்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்த இத்தீவின் புகழ் பெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட[2] எலிபண்டா குகைகளைக் காண, மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயிலிருந்து, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு இயந்திரப் படகு, எலிபெண்டா தீவிற்கு இயக்கப்படுகிறது. எலிபெண்டா தீவிலிருந்து மும்பைக்குத் திரும்ப, முதல் படகு மதியம் 12.30க்கும், கடைசிப் படகு மாலை 5.30க்கும் இயக்கப்படுகிறது. இத்தீவில் சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்க அனுமதி இல்லை. எலிபெண்டா தீவு 16 கி.மீ. பரப்பளவு கொண்டது. 18°57′N 72°56′E / 18.95°N 72.93°E. எலிபெண்டா தீவு, ராய்காட் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எலிபெண்டா தீவு தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 1,200 மட்டுமே. இங்குள்ள மக்கள் நெல் பயிரிடுதல், மீன் பிடித்தல், படகுகளை பழுது நீக்குதல் போன்ற பணிகளில் உள்ளனர். இத்தீவின் உயரமான பகுதியில், மராத்தியப் பேரரசின் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளது. எலிபெண்டா தீவில் செண்ட்பந்தர், மோராபந்தர் மற்றும் ராஜ்பந்தர் என மூன்று குக்கிராமங்கள் உள்ளது. எலிபண்டா குகைகள் செண்ட்பந்தர் கிராமத்தில் உள்ளது. மோராபந்தர் கிராமம் அடர்ந்த காடுகளைக் கொண்டது. எலிபெண்டா தீவில் இரவில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதியில்லை. படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia