எலிஹூ ரூட்எலிஹூ ரூட் (Elihu Root; பிப்ரவரி 15, 1845 – பிப்ரவரி 7, 1937) ஓர் அமெரிக்க வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் கீழ் மாநிலச் செயலாளராகவும், குடியரசுத் தலைவர் வில்லியம் மெக்கின்லியின் கீழ் போர்ச் செயலாளராகவும் பணியாற்றினார். வாஷிங்டன், டி.சி.யில் உயர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட அரசாங்கப் பதிவிகளிலும் நியூயார்க் நகரில் தனியார் துறை சட்ட நடைமுறை பதவிகளிலும் பலமுறை பணியாற்றியுள்ளார். வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து குடியரசுத் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் பணிகளை மேற்கொண்டார். நியூயார்க்கில் இருந்து ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினராக 1909-1915 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மாநிலச் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். ரூட் 1912 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விஎலிஹூ ரூட் நியூயார்க்கின் கிளிண்டனில் ஓரன் ரூட் மற்றும் நான்சி விட்னி பட்ரிக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், இவர் இங்கிலாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்.[1] இவரது தந்தை ஆமில்டன் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தார். கிரான்வில் ஸ்டான்லி ஹாலின் வகுப்புத் தோழராக இருந்த வில்லிஸ்டன் செமினரி ஆகியோருடன் எலிஹு ஆமில்டன் கல்லூரியில் சேர்ந்தார். அவர் சிக்மா ஃபை சொசைட்டியில் சேர்ந்தார் மற்றும் ஃபை பீட்டா கப்பா சொசைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] பட்டம் பெற்ற பிறகு, இரண்டு ஆண்டுகள் உடற்கல்வி பயிற்றுவிப்பாளராக இருந்தார், ரோம் (NY) பிரீ அகாதமியில் ஓராண்டு கற்பித்தார். சொந்த வாழ்க்கை1878 ஆம் ஆண்டில் தனது 33 ஆம் வயதில், கிளாரா பிரான்சிஸ் வேல்சை மணந்தார்.அவர் சயின்டிஃபிக் அமெரிக்கனின் நிர்வாக ஆசிரியரான சேலம் வேல்ஸின் மகள் . இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இதில் மூத்தவரான எடித் யுலிஸஸ் எஸ். கிராண்ட் III என்பவரை மணந்தார். எலிஹு ஒரு வழக்கறிஞர் ஆவார். எட்வர்ட் வேல்ஸ் ரூட் ஆமில்டன் கல்லூரியில் கலை பேராசிரியராகப் பணியாற்றினார். ரூட் நியூயார்க்கின் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்புக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், 1898-99 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலும் மீண்டும் 1915-16 ஆம் ஆண்டுகளிலும் இரண்டு முறை அதன் தலைவராகவும் பணியாற்றினார். 1904-1905 வரை நியூயார்க் நகர வழக்குரைஞர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். இறப்பு, மரபுரூட் 1937 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் இறந்தார். இவரது மகன், எலிஹூ ரூட் ஜூனியர் ஹாமில்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அலிடா ஸ்ட்ரைக்கர் என்பவரைத் திருமணம் செய்தார். அவரது தந்தை எம். வூல்ஸி ஸ்ட்ரைக்கர் ஹாமில்டன் கல்லூரியின் தலைவராக இருந்தார்.[3] ரூட் 1928 ஆம் ஆண்டில் இறந்த அவரது மனைவி கிளாராவிற்கு அருகே ஹாமில்டன் கல்லூரிக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 1893 ஆம் ஆண்டில் கிளின்டனில் வாங்கிய வீட்டினை 1972 ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது . விருதுகள் மற்றும் கவுரவங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia