எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். பொது சேம பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்திய எல்லைகளில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கவும், எல்லைப்புற சுரங்கப்பாதைகளை அமைக்கவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுள்ள வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கிறது. இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் சாலைகளை அமைக்கிறது. இமயமலை உச்சியிலும், மேற்கு வங்காள சதுப்பு நிலங்களிலும், தார் பாலைவனப் பகுதிகளிலும் இதன் பணி குறிப்பிடத்தக்கது.[1] இவ்வமைப்பு உயரமான இடத்திலும், சுமார் 5,608 மீட்டர்கள் (18,399 அடி) உயரத்திலும் சாலைகள் அமைத்துப் பராமரிக்கிறது. இவ்வமைப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 22 இந்திய மாநிலங்களில் மொத்தம் 32,885 கிலோமீட்டர்கள் (20,434 mi) நீள சாலைகளையும், 12,200 மீட்டர்கள் (40,026 அடி) நீள பாலங்களையும் பராமரித்து வருகிறது வரலாறு7 மே 1960ல் எல்லைப்புறச் சாலை மேம்பாட்டு வாரியத்தால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் மதிப்புக் கொண்ட தலைமை இயக்குநர் பி.ஆர்.ஓ.வினை வழிநடத்துகிறார்.[2][3] பணிகள்அமைதிக் காலங்கள்
போர்க் காலங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia