எல். பி. சிறீராம்
எல். பி. ஸ்ரீராம் (L. B. Sriram) (பிறப்பு லங்கா பத்ராத்ரி சிறீ ராமச்சந்திர மூர்த்தி; 30 மே 1952) ஓர் இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு நாடகங்களில் துன்பயியல் நாடகங்களுக்காக அறியப்படுபவர். இவர் கோகிலா (1990) என்ற திரைப்படத்தின் மூலம் உரையாடல் எழுத்தாளராக அறிமுகமானார். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர் தொடங்கினார். [1] தொடர்ந்து இவர் சாலா பாகுந்தி (2000), அம்மோ! ,ஒகடோ தரீக்கு (2000), ஆசாத் (2000), ஹனுமான் ஜங்ஷன் (2001), இட்லு ஸ்ரவாணி சுப்ரமண்யம், (2001), ஆதி (2002), தில் (2003), சத்ரபதி (2005), ஏவாடி கோல வாடிதி (2005), ஸ்டாலின் (2006) ), சீமா சாஸ்திரி (2007), காம்யம் (2008), சொந்த ஊரு (2009), யுவடு (2014), லெஜண்ட் (2014) மற்றும் சரியோனுடு (2016) போன்ற படைப்புகளில் கிட்டத்தட்ட 500 படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். [2] [3] தெலுங்குத் திரைபடங்கலில் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் சிறீராம், ஐந்து முறை நந்தி விருதுகளை வென்றுள்ளார். [4] [5] அம்ருதம் தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியான அம்ருதம் த்விதீயம் என்ற வலைத் தொடரில் ஆஞ்சிநேயுலுவாக நடித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia