எஸ்தர் அனில்
எஸ்தர் அனில் (Esther Anil ) மலையாளம் , தெலுங்கு மொழி படங்களில் முதன்மையாக பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[2] 2010 இல் வெளியான "நல்லவன்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமான திரிஷ்யம், அதன் தொடர்ச்சியான திரிஷ்யம் 2 ஆகிய படங்களில் அனுமோல் ஜார்ஜ் (அனு) என்ற வேடத்திற்காகவும், 2020இல் வெளியான கனவுருப்புனைவுத் திரைப்படமான "ஊலூ"வில் ஊலூ என்ற வேடத்திற்காகவும் இவர் மிகவும் பிரபலமானவர்.[3][4][5] 2016ஆம் ஆண்டில் சிறந்த குழந்தைக் கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகளை எஸ்தர் வென்றுள்ளார். தமிழ் மொழியில் வெளியான திரிஷ்யம் 92013) படத்தின் மறு ஆக்கமான, பாபநாசம்(2015) படத்தில் இவர் திரிஷ்யம் படத்தில் நடித்த தனது பாத்திரத்தையே மீண்டும் நடித்திருந்தார்.[6][7] தமிழில் வெளிவராத குறளி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[8] தெலுங்கில் ஜோஹார் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.[9]) ![]() சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia