எஸ். ஏ. ராமதாஸ்
எஸ்.ஏ. ராமதாஸ் (S. A. Ramadas) [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாநிலத்தில் கிருஷ்ணராஜ தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3] 2008 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ். சோமாசேகருக்கு எதிராக போட்டியிட்டு, சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பிரதான இந்து மதத் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2004 ஆம் ஆண்டில் நடந்த தோ்தலில் எம். கே. சோமசேகரிடம் தோற்றாா். 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் கர்நாடகவில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பா நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010 இல், இவர் எடியுரப்பா அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவாிடம் மருத்துவக் கல்வி துறைகள் ஒப்படைக்கப்பட்டது. சதனாந்த கவுடா அரசாங்கமும் இதே பொறுப்பில் இவரை பணியாற்ற அனுமதித்தது. 2008 - 2013 மாநாட்டில் அவர் மைசூர் மாவட்டத்தில் மாவட்ட செயற்குழுவில் இருந்தார். 2013 ஆம் ஆண்டில் அவர் கிருஷ்ணராஜ தொகுதியில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்த எம்.கே. சோமசேகர் என்பவாிடம் தோற்றாா். மைசூர் நகரில் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள அஸ்ரே அறக்கட்டளை என்றழைக்கப்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றை ராம்தாஸ் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறாா்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia