எஸ். ஜெனிபர் சந்திரன்
எஸ். ஜெனிபர் சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ அமைச்சர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததால், அக்கட்சியைச் சேர்ந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் என்பவர் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[2] ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிடம் திமுக அதிகாரத்தை இழந்த பின்னர் ஆகத்து 2002 ல், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது இவரது வீடும் சேதனையிடப்பட்டது.[3][4][5] இதன்பிறகு 2012 அதிமுக ஆட்சிக்காலத்தில் இவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. பின்னர் ஜெனிபர் சந்திரன் 2004 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.[6] இதன் பிறகு இவருக்கு அதிமுகவில் மீனவரணி மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2019 ஆகத்து 6 அன்று உடல் நலக்குறைவால் ஜெனிபர் சந்திரன் மதுரையில் ஒரு தனியார் மருத்தவமனையில் இறந்தார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia