ஏகன் (திரைப்படம்)

ஏகன்
இயக்கம்ராஜூ சுந்தரம்
கதைசரண்
யூகி சேது
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
நயன்தாரா
ஜெயராம்
சுமன்
நவ்தீப்
பியா
நாசர்
ஒளிப்பதிவுஅர்ஜுன் ஜனா
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 25, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஏகன் (Aegan) ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஜங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்தது. அஜித் குமார், நயன்தாரா, நவ்தீப், பியா, நாசர், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2][3]

கதை

அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு தனியாளாக அடித்துத் துவம்சம் செய்யும் போலீஸ் இவர். வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார் சிவா
நயன்தாரா மல்லிகா
சுமன் ஜோன் சின்னப்பா
நவ்தீப் நரேன்
பியா பூஜா
நாசர் கார்த்திகேயன்

பாடல்

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

பாடல் பாடியவர்கள்:
ஹேய் சாலா ப்லேஸ், நரேஸ் ஐயர், அஸ்லம்
ஹேய் பேபி சங்கர் மகாதேவன்
யாகு யாகு சுவி, ஊஜேனி, சத்யன், ரன்ஜித், நவீன்
கிச்சு கிச்சு வசுந்திரா தாஸ், யுவன் ஷங்கர் ராஜா
ஓடும் வரையில் கே கே, சென்தி

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "பன்ச் டயலாக், படு சூடான சண்டைக் காட்சிகள் என்று பார்த்துப் பழக்கப்பட்ட அஜீத்தை வைத்து காமெடிக் கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜூ-சுந்தரம்... படம் முழுக்க பில்லா ஹேங் ஓவர்! வில்லனின் அடியாட்கள் பார் இருட்டிலும்கூட கூலிங் கிளாஸ் அணிந்து மிரள வைக்கிறார்கள்... காமெடிப் படம் எடுக்கலாம். படத்தையே காமெடியாக எடுத்தால்..." என்று எழுதி 38/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

  1. "Venkat Prabhu directs Ajith". IndiaGlitz. 2008. Archived from the original on 3 March 2008. Retrieved 29 February 2008.
  2. "Ajith's Akbar eyes Parvathi". Behindwoods. 2007. Archived from the original on 20 October 2007. Retrieved 18 October 2007.
  3. "Ajith to fly to Hong Kong". IndiaGlitz. 2008. Archived from the original on 15 January 2008. Retrieved 14 January 2008.
  4. "சினிமா விமர்சனம்: ஏகன்". விகடன். 2008-11-12. Retrieved 2025-06-01.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya