நயன்தாரா
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[6][7][8] 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[7] ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விநயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.[9][10] டயானா மரியம் குரியன் நவம்பர் 18, 1984 அன்று [11][12] கர்நாடகாவின் பெங்களூரில்,[13] குரியன் கொடியட்டுக்கும் ஓமனா குரியனுக்கும் சிறிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார்.[14][15] இவரது அண்ணன் லெனோ ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கிறார்.[16] இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரி என்பதால் நயன்தாரா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படித்தார்.[16] இவரது குடும்பம் கேரளத்தை சேர்ந்தது, இவரது தாய்மொழி மலையாளம்.[17] நயன்தாரா தனது பள்ளிப்படிப்பை ஜாம்நகரிலும் தில்லியிலும் படித்தார்.[18] திருவல்லாவில், திருமூலபுரத்திலுள்ள பாலிகாமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்,[19] பின்னர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் திருவல்லாவிலுள்ள மார்த் தோமா கல்லூரியில் பயின்றார்.[20][21] நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்
நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்
நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia