ஏணி கோட்டுரு

ஏணி கோட்டுரு
ஏணி கோட்டுரு - L8.
முனைகள்2n
விளிம்பு3n-2
நிற எண்2
நிறச் சுட்டெண்3 for n>2
2 for n=2
1 for n=1
இயல்புகள்அலகு தொலைவு கோட்டுரு
அமில்தோன் கோட்டுரு
சமதளபடுத்தக்கூடிய கோட்டுரு
இருகூறு கோட்டுரு
NotationLn

கோட்டுருவியலில் ஏணி கோட்டுரு (ladder graph) Ln என்பது 2n முனைகளும் 3n-2 விளிம்புகளும் கொண்ட சமதளப்படுத்தக்கூடிய திசையற்ற கோட்டுருவாகும்.[1]

இரு பாதை கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக ஏணி கோட்டுருவை உருவாக்கலாம். அவ்விரு பாதை கோட்டுருக்களில் ஒன்று ஒரேயொரு விளிம்புடையதாக இருக்க வேண்டும்: Ln,1 = Pn × P2.[2][3]

பண்புகள்

நிற பல்லுறுப்புக்கோவை .
ஏணி கோட்டுருக்கள்: L1, L2, L3, L4, L5.

வட்ட ஏணி கோட்டுரு

வட்ட ஏணி கோட்டுருவை (CLn) n≥3 நீளமுள்ள சுழற்சி மற்றும் ஒரு விளிம்பின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அல்லது இரு படிகொண்ட நான்கு முனைகளை "நேராக" இணைப்பதன் மூலம் உருவாக்கலாம்.[4] வட்ட ஏணி கோட்டுருவை குறியீட்டில் CLn = Cn × P2 எனக் எழுதலாம். இது 2n முனைகளும் 3n விளிம்புகளுமுடையது.

ஏணி கோட்டுருவைப் போலவே வட்ட ஏணி கோட்டுருவும் இணைப்புள்ள கோட்டுரு; சமதளப்படுத்தக் கூடியது; அமில்தோன் கோட்டுரு. ஆனால் n இரட்டை எண்ணாக இருந்தால் மட்டுமே இருகூறு கோட்டுருவாக இருக்கும்.

பட்டகங்களின் பன்முகக் கோட்டுருக்களாக அமைவதால் வட்ட ஏணி கோட்டுருக்கள் பட்டகக் கோட்டுருக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

வட்ட ஏணி கோட்டுருக்கள்:


CL3

CL4

CL5

CL6

CL7

CL8

மோபியசு ஏணி

இரு படிகொண்ட நான்கு முனைகளை குறுக்காக இணைப்பதன் மூலம் உருவாகும் [முப்படிக் கோட்டுரு]] மோபியசு ஏணி என அழைக்கப்படுகிறது.

மோபியசு ஏணி M16 இன் இருவிதத் தோற்றம்.

மேற்கோள்கள்

  1. Weisstein, Eric W., "Ladder Graph", MathWorld.
  2. Hosoya, H. and Harary, F. "On the Matching Properties of Three Fence Graphs." J. Math. Chem. 12, 211-218, 1993.
  3. Noy, M. and Ribó, A. "Recursively Constructible Families of Graphs." Adv. Appl. Math. 32, 350-363, 2004.
  4. Chen, Yichao; Gross, Jonathan L.; Mansour, Toufik (September 2013). "Total Embedding Distributions of Circular Ladders". Journal of Graph Theory 74 (1): 32–57. doi:10.1002/jgt.21690. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya