ஏர்க்கள உருவகம்புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஏர்க்கள உருவகம் என்பதும் ஒன்று. இது [வாகைத்திணை]]யின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் இரண்டு உள்ளன. [1] தொல்காப்பியம் இதனை ஏரோர் போலத் தேரோர் தோற்றிய வென்றி எனக் குறிப்பிடுகிறது. [2] புறப்பொருள் வெண்பாமாலை வாகைத்திணையின் 33 துறைகளில் ஒன்றாக இதனை ‘மறக்கள வழி’ எனக் குறிப்பிடுகிறது. [3] யானை மேகமாக, மறவர் வாள் மின்னலாக, முரசு இடிமுழக்கமாக, பாயும் குதிரைகள் புயல் காற்றாக, வில்லால் எய்த அம்புகள் மழைத்துளியாக, ஈரம் பட்ட வயலில் தேர் ஏராக, உழும் படைகள் படைச்சாலாக (உழும் பள்ளம்) வேல் கணையம் ஆகியவற்றை விதைத்த நிலத்தில் பகைவர் பிணங்களாகிய விளைச்சலை நரி பேய் கழுது உண்ண, பூதம் காவல் காக்கும் ‘பொலிகளம்’ – என்று போர் ‘ஏர்க்களமாக’ உருவகம் செய்யப்பட்டிருப்பது இத்துறை. [4] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்குநாட்டுக் கருவூர் அரசன் பிட்டனை வீழ்த்திய போர்க்களம் ஏர்க்களமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. முரசம் இடியாக, யானை மேகமாக, குதிரை களத்தில் போரடிக்க, அம்புக்கணை காற்றாக வீச வெற்றியைத் தூற்றி எடுத்தானாம். [5] அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia