ஏ பெருமாள்

அ. பெருமாள் (A. Perumal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மற்றொரு வெற்றியாளர் யூ. முத்துராமலிங்க தேவர் ஆவார்.[1] 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டு தொகுதி வேட்பாளராக அவர் வெற்றி பெற்றார்.[2] 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் காலமானார்.

மேற்கோள்கள் 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya