ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் (United States Census Bureau அல்லது Bureau of the Census) ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசுத்துறை ஆகும். இந்த ஆணையம் ஐக்கிய அமெரிக்க வணிக அமைச்சகத்தின் கீழானது.[1] சட்டபூர்வ ஆணைஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின்படி குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு மாநிலமும் எத்தனை கூட்டரசு சார்பாளர்களைப் பேராயத்திற்கு அனுப்பலாம் என்பதைத் தீர்மானிக்கும். இந்தப் பொறுப்பை ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கொண்டுள்ளது. இது மக்களைக் குறித்தும் அவர்களின் பொருளியல்நிலை குறித்தும் தேசம் தொடர்புள்ள பல்வேறு தரவுகளை சேகரிக்கிறது.[2] ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பின் தலைப்பு 13இல் இந்த ஆணையத்திற்கான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கணக்கெடுப்பு 1790இல் எடுக்கப்பட்டது. சான்றுகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia