ஐதீகமாலாஐதீகமாலா (Aithihyamala) என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையாடல் புத்தகங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் மலையாளம் மற்றும் சமசுகிருதம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டவையாகும். பொதுவாக இவற்றில் உயிர்கள், புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களை காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக் கலை, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேதம் பற்றிய தெளிவுகள், அரண்மணையாளர்கள், யானைகள் மற்றும் யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 126 புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia