ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி
ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி (Ivory Coast national football team,French: Équipe de Côte d'Ivoire de football ), பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் ஐவரி கோஸ்ட் நாட்டின் சார்பில் பங்கு பெறும் காற்பந்து அணியாகும். இவ்வணி யானைகள் (The elephants, Les Éléphants) என்று அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. ஐவரி கோஸ்ட் நாட்டின் காற்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஐவரி கோஸ்ட் காற்பந்துக் கூட்டமைப்பு இத்தேசிய அணியை நிர்வகிக்கிறது. 2005 ஆண்டு வரை இவ்வணியினரின் உச்சபட்ச சாதனை, 1992 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியை, கானாவை வென்று கைப்பற்றியதாகும். ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது, தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்கு (2006, உலகக்கோப்பை, 2014) தகுதி பெற்றுள்ளது. 2006 ஆம் 2010 ஆம் ஆண்டுகளில் குழு நிலையைத் தாண்டவில்லை. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையின்படி ஆப்பிரிக்காவின் சிறந்த அணி இதுவேயாகும்[1]. குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia