ஒசே ரவூல் கப்பபிளாங்கா
ஒசே ரவூல் கப்பபிளாங்கா (José Raúl Capablanca; 19 நவம்பர் 1888 – 8 மார்ச் 1942) என்பவர் 1921 முதல் 1927 வரை உலக சதுரங்க வெற்றி வீரராக இருந்த கியூபாவைச் சேர்ந்த சதுரங்க வீரர் ஆவார். ஒரு சதுரங்க மேதையான கருதப்படும் இவர், தனது சிறப்பான இறுதியாட்டத்திற்காகவும் மற்றும் ஆட்ட வேகத்திற்காகவும் பரவலாகப் அறியப்பட்டார். குழந்தைப் பருவம்![]() ஹோஸே ராவுல் காப்பாபிளான்க்கா ஸ்பானிய இராணுவ அதிகாரி ஜோஸ் மரியா காப்பாபிளான்க்காவிற்கும் , மற்றும் ஸ்பானிய காத்தலோனிய பெண்ணான மடில்டே மரியா கிராவுபெரா வை மரீனிற்கும் இரண்டாவது மகனாக, 19 நவம்பர் 1888 அன்று, ஹவானாவில் [1] பிறந்தார். காப்பாபிளாங்காவின் கூற்றுப்படி, அவர் நான்கு வயதில் தனது தந்தை அவரின் நண்பர்களுடன் விளையாடுவதைப் பார்த்து சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். ஒரு முறை அவரது தந்தையின் சட்டவிரோத சதுரங்க நகர்த்தலை சுட்டிக்காட்டினார். பின்னர் அவரது தந்தையையே சதுரங்கத்தில் தோற்கடித்தார்.[2] அவரின் எட்டு வயதில் பல முக்கியமான போட்டிகளை நடத்திய ஹவானா சதுரங்க குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர் அடிக்கடி விளையாட அனுமதிக்கப்படவில்லை. நவம்பர் மற்றும் டிசம்பர் 1901 க்கு இடையில், அவர் கியூப சதுரங்க வெற்றிவீரரான ஜுவான் கோர்சோவை ஒரு போட்டியில் மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4][5] இருப்பினும், ஏப்ரல் 1902 இல் அவர் தேசிய வெற்றிவீரருக்குக்கான போட்டியில் நான்காவது இடத்தையே பிடித்தார். இப்போட்டியில் கோர்சோவுடனான இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தார்.[5] 1905 ஆம் ஆண்டில் அவர் மன்ஹாட்டன் சதுரங்க குழுவில் இணைந்தார், விரைவில் அக்குழுவின் மிக வலிமையான வீரராக அங்கீகரிக்கப்பட்டார்.[3] அவர் குறிப்பாக விரைவு சதுரங்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார், 1908 இல் அவர் சதுரங்கத்தில் கவனம் செலுத்த பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்.[3][4] இளமை வாழ்க்கை![]() விரைவு சதுரங்கத்தில் காப்பாபிளான்க்காவின் திறமை 1909 இல் அவருக்கு அமெரிக்க அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ள வழிவகுத்தது 27 நகரங்களில் 602 ஆட்டங்களை விளையாடி, அவர் 96.4% வெற்றி விகிதத்தை பெற்றார். உலக சதுரங்க வாகையாளருக்கான போட்டி1911 ஆம் ஆண்டில், உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பிற்காக கேபாபிளாங்கா லாஸ்கருக்கு சவால் விடுத்தார். லாஸ்கர் இந்த போட்டிக்கு 17 நிபந்தனைகளை முன்மொழிந்தார். இவற்றில் சிலவற்றை காப்பாபிளான்க்கா எதிர்த்ததால் போட்டி நடைபெறவில்லை.[6][7] ![]() 1913இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், அவர் அலெக்சாண்டர் அலெகைன், யூஜின் ஸ்னோஸ்கோ-போரோவ்ஸ்கி மற்றும் ஃபியோடர் டுஸ்-சோட்டிமிர்ஸ்கி ஆகியோருக்கு எதிராக போட்டிகளில் விளையாடினார், ஒரு ஆட்டத்தில் மட்டும் ஸ்னோஸ்கோ-போரோவ்ஸ்கியிடம் தோற்று, மற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்.[3] உலக சதுரங்க வாகையாளர்1921 உலக சதுரங்க வாகையாளர் போட்டி ஜோஸ் ரவுல் கபாபிளாங்கா மற்றும் இமானுவேல் லாஸ்கர் இடையே நடைபெற்றது. இது மார்ச் 18 முதல் ஏப்ரல் 28 வரை கபாபிளாங்காவின் சொந்த ஊரான ஹவானாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் காப்பாபிளான்க்கா 9-5 (4 வெற்றி, 0 தோல்வி, 10 டிரா) என்ற கணக்கில், ஒரு ஆட்டம் கூட தோற்காமல் வெற்றி பெற்று மூன்றாவது உலக சதுரங்க வெற்றி வீரரானார். இப்பட்டதை 1927ஆம் ஆண்டு நடந்த உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் அலெகைனிடம் இழந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia