ஒட்டுமொத்த நீளம் (கப்பல்)![]() ![]() கப்பலொன்றின் ஒட்டுமொத்த நீளம் (length overall, சுருக்கமாக LOA, o/a, o.a. அல்லது oa) எனப்படுவது, நீர்மட்டத்துக்கு இணையாக அளக்கப்படும் அக்கப்பலின் உடற்பகுதியின் ஆகக்கூடிய நீளம் ஆகும். கப்பலை அதற்குரிய இடத்தில் நிறுத்துவதில் இந்நீளம் முக்கியமானது. கப்பலின் அளவைக் குறிப்பிடுவதற்கான மிகவும் பொதுவான வழியும் இதுவாகும். அத்துடன், படகு நிறுத்துமிடங்களில் அதற்கான கட்டணங்களைக் கணிப்பிடுவதற்கும் இந்த நீளம் பயன்படுகிறது[1] (எகா: ஒரு மீட்டர் ஒட்டுமொத்த நீளத்துக்கு £2.50). ஒட்டுமொத்த நீளம் கப்பலின் உடற்பகுதியில் மட்டுமே அளக்கப்படுகிறது.[2] இதிற் பொருத்தப்படும் முகப்புச்சட்டம், பிற இணைப்புகள் போன்றவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இவ்வாறுதான் சில பந்தயப் படகுகளும், உயர் கப்பல்களும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றன.[3] அதேவேளை வேறு சில மூலங்கள் முகப்புச்சட்டங்களையும் ஒட்டுமொத்த நீளத்தில் சேர்த்துக்கொள்கின்றன.[4][5] ஒட்டுமொத்த நீளத்தைக் குறிப்பிடுவதில் உள்ள, "சட்டத்தோடு கூடிய நீளம்", "முகப்புச்சட்டம் உள்ளிட்ட மொத்த நீளம்", "நிறுத்த நீளம்", "முகப்புச் சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நீளம்" போன்ற மேலும் பல முறைகள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia