கியூ-பெருமம்
கியூ-பெருமம் அல்லது கத்தார்-பெருமம் என்பது ஒரு வகைக் கப்பல், குறிப்பாக இது மென்தகட்டுவகை நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவியைக் குறிக்கிறது. இது கத்தாரில் உள்ள நீர்மமாக்கிய இயற்கை வளிம முனையங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய கப்பல் வகையாகும். கியூ-பெருமக் கப்பல்களே உலகின் நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளுள் மிகவும் பெரியது.[1][9] நுட்ப விபரங்கள்கியூ-பெரும அளவு கொண்ட கப்பலொன்றின் அதிகூடிய நீளம் 345 மீட்டர்s (1,132 அடி), அகலம் 53.8 மீட்டர்s (177 அடி), உயரம் 34.7 மீட்டர்s (114 அடி), மிதப்புயரம் 12 மீட்டர்s (39 அடி).[9][10] இவ்வகைக் கப்பல்கள் 266,000 கன சதுர மீட்டர்கள் (9,400,000 cu ft) நீர்மமாக்கிய இயற்கை வளிமக் கொள்ளளவு கொண்டவை. இது 161,994,000 கன சதுர மீட்டர்கள் (5.7208×109 cu ft) இயற்கை வாயுவுக்குச் சமமானது. இக்கப்பல்கள் இரண்டு வேகம் குறைந்த டீசல் இயந்திரங்களால் இயங்குகின்றன. இவை வழமையான நீராவிச் சுழலிகளைவிடச் செயற்றிறன் கூடியவையும், சூழலில் குறைந்த தாக்கத்தை விளைவிப்பனவுமாக உள்ளன.[11] ஆவியாகும் வளிமத்தை மீளவும் நீர்மமாக்கிச் சரக்குத் தாங்கிகளுக்கு அனுப்புவதற்காக கியூ-பெருமக் கப்பல்களில் மீள்நீர்மமாக்கும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.[12] இவ்வசதி, நீர்மமாக்கிய இயற்கை வளிமத்தின் இழப்பைக் குறைத்து, பொருளாதார, சூழலியல் பயன்களை வழங்குகிறது. கியூ-பெருமக் கப்பல்கள் 40% குறைந்த ஆற்றல் தேவையைக் கொண்டுள்ளதுடன், வழமையான நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளைவிட குறைந்த கரிமத்தை வெளியிடுவதாகவும் கணிக்கப்படுள்ளது.[13][14] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia