ஒன்பது ரூபாய் நோட்டு (நூல்)
ஒன்பது ரூபாய் நோட்டு (ஆங்கிலம்:Onbathu Rupai Nottu) என்பது தங்கர் பச்சான் எழுதிய முதல் தமிழ்ப் புதினம் ஆகும்.[1] மேலும் இந்நூலுக்கு த. ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். வரலாறுஒன்பது ரூபாய் நோட்டும் இரண்டு - பத்து - தொண்ணூற்று ஆறும் என்ற தலைப்பில் பேராசிரியர் த. பழமலய் இந் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையின் பகுதி:
1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நூலாசிரியர், தனது தந்தையின் இறப்புக்காக தனது கிராமத்திற்குப் போயிருந்தபோது எழுந்த எண்ணங்களால் எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புதினம் முடிய பதினொரு ஆண்டுகள் ஆனது. பலாவும், முந்திரியும், மாவும் நெடிவீசும் மண்ணின் மணத்துடன் ’வறுமையில் செம்மை’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
திரைப்பட வடிவம்இந்தப் புதினம் தங்கர் பச்சானால் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற பெயரிலேயே திரைப்படமாக இயக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia