ஒயிட்பீல்ட், பெங்களூர்
ஒயிட்பீல்ட் (Whitefield) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரின் சுற்றுப்புறப்பகுதியாகும். 1800களின் பிற்பகுதியில் பெங்களூரின் ஐரோவாசியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கான குடியேற்றமாக நிறுவப்பட்ட இப்பகுதி, 1990களின் பிற்பகுதி வரை பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய சிறிய குடியேற்றமாக இருந்தது. இது இப்போது பெருநகர பெங்களூரின் முக்கிய பகுதியாகும். [1] 19 ஆம் நூற்றாண்டில் மைசூர் மகாராஜா பத்தாம் சாமராச உடையாரிடமிருந்து 4,000 ஏக்கர் நிலத்தைப் பெற்ற ஐரோப்பிய மற்றும் ஆங்கிலோ இந்திய சங்கத்தின் நிறுவனர் டி.எஸ். ஒயிட் என்பாரது பெயரிடப்பட்டது. [2] வரலாறு1882 ஆம் ஆண்டில், மைசூர் மாநிலத்தின் மகாராஜா மன்னர் பத்தாம் சாமராச உடையார் தனது எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒயிட்பீல்டில் விவசாயக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக 3,900 ஏக்கர் (16 கிமீ 2) நிலத்தை ஐரோவாசிய மற்றும் ஆங்கிலோ-இந்திய சங்கத்திற்கு வழங்கினார். இச்சங்கத்தினர் தங்களுக்கென சொந்தமாக அழைக்கக்கூடிய ஒரு குடியேற்றத்தை உருவாக்கியதன் ஒரு பகுதியாக அவை இருந்தன.இச் சங்கத்தின் அப்போதைய தலைவரான திரு. ஒயிட், இதில் ஒரு ஆர்வத்தை எடுத்துக் கொண்டார் . மேலும், இதன் முன்னேற்றத்திற்கு உதவினார். இது ஆரம்பத்தில் ஒரு மேல்நோக்கி பணியாக இருந்தது. 1990 களின் பிற்பகுதி வரை, இது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. அதன் பின்னர் இது இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இங்குள்ள ஏற்றுமதி மேம்பாட்டு தொழில்துறை பூங்கா (ஈபிஐபி) நாட்டின் முதல் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும் - சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, பெங்களூர் (ஐடிபிபி) போன்ற பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. ஒயிபீல்ட் இப்போது அதிகாரப்பூர்வமாக பெங்களூர் நகரத்தின் ஒரு பகுதியாகும். இது பெரிய பெங்களூர் மாநகரப் பேரவையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. புகைப்படங்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia