உரோமன் கத்தோலிக்கம், மெதாடிசம், மற்றும் பாப்டிசம் .[3]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பரங்கியர்கள், இந்தோ ஆரியர்கள், திராவிடர்கள், பிரித்தானிய மக்கள், ஆங்கிலோ பர்மியர்கள், சுகாட்டிசு-இந்தியர்கள், ஐரிசு-இந்தியர்கள், கிரிட்டங்கு மக்கள், சிங்கப்பூர் ஐரோப்பியர்கள்
ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[10].
தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[11][12]
ஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.
தொழில்
கல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.[14].மேலும் உள்நாட்டு உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருகிறார்கள்[15]
இந்திய விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்கு முன்னர் எட்டு இலட்சமாக இருந்த ஆங்கிலோ-இந்தியர்களின் மக்கட்தொகை, தற்போது 80,000–125,000 ஆக குறைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள், திருமண உறவுகள் மூலம் தங்கள் வாழும் உள்நாட்டு மக்களுடன் கலந்து விட்டனர். பலர் ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.[1][16][17]
இந்திய விடுதலைக்கு முன்னர், சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆங்கிலேய இந்தியர்கள், ஆளுனரால் நியமிக்கப்பட்டனர்.[21] தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் மட்டும் நியமனம் செய்யப்படுகிறார்.[22]
மேற்கோள்கள்
↑ 1.01.1Fisher, Michael H. (2007), "Excluding and Including "Natives of India": Early-Nineteenth-Century British-Indian Race Relations in Britain", Comparative Studies of South Asia, Africa and the Middle East 27 (2): 303–314 [305], doi:10.1215/1089201x-2007-007
↑Blair Williams, Anglo Indians, CTR Inc. Publishing, 2002, p.189
Bridget White-Kumar "The best of Anglo-Indian Cuisine – A Legacy", "Flavours of the Past", "Anglo-Indian Delicacies", "The Anglo-Indian festive Hamper", "A Collection of Anglo-Indian Roasts, Casseroles and Bakes"
Dady D S "Scattered Seeds: The Diaspora of the Anglo-Indians" Pagoda Press