ஒலிவியா கியோல்பாசா
ஒலிவியா கியோபாசா ([ɔˈli.vja kjɔwˈba.sa]; பிறப்பு: 26 ஏப்ரல் 2000) [1] என்பவர் ஒரு போலந்து நாட்டினை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐரோப்பிய இளைஞர்கள் சதுரங்கம் போட்டியில் இவர் ஜெயித்தார். 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உலக இளைஞர் சதுரங்க போட்டியில் பங்கு பெற்று வென்றார். வாழ்க்கை2016 இல் கியோபாசாக்கு பன்னாட்டு பெண் மாஸ்டர் என்ற பட்டத்தை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இவருக்கு வழங்கியது.[2] ஆகத்து 2021 இல், கியோபாசா பெண்களின் ஐரோப்பிய தனி சதுரங்க போட்டியில் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பின்பு பன்னாட்டு சதுரங்க மாஸ்டர் (International Master) பட்டத்திற்கான குறித்த முதல் தகுதியைப் பெற்றார். அக்டோபரில் போல்ஸ்கி எக்ஸ்ட்ராலிகா போட்டி நடந்த போது இவர் இரண்டாவது பன்னாட்டு சதுரங்க மாஸ்டர் தகுதியைப் பெற்றார்.[3] கியோலாபாசா 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட்டில் போலாந்து நாட்டின் சார்பாக விளையாடினார். இவர் தனது முதல் ஒன்பது ஆட்டங்களில் வெற்றி பெற்றார். இவர் 11 சுற்றுகளில் 9.5 வெற்றி எண்களுடன் போட்டியை நிறைவு செய்தார். அவர் தனது மூன்றாவது மற்றும் இறுதி பன்னாட்டு சதுரங்க மாஸ்டர் தகுதியைப் பெற்றார். இவர் பெண்களுக்கான போட்டியில் சிறந்த தனி வீராங்கனையாக திகழ்ந்தார். கியோபாசா பன்னாட்டு சதுரங்க மாஸ்டர் வைசாலி இரமேசுபாபுவை தோற்கடித்துள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த அன்னா உசேனினா எதிரான கடைசிச் சதுரங்க சுற்றில் மட்டும் இவர் தோல்வியடைந்தார்.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia